பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு! – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு! – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், பெட்ரோல் விலை ரூபாய் 9.50 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை பூர்த்தி செய்ய வெளிநாட்டு கொள்முதலை நம்பியுள்ளது. இது ஆசியாவில் அதிக எண்ணெய் விலைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும்.எண்ணெய் விலைகள் ஏற்கனவே இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

மேலும் பலவீனமான ரூபாய் மதிப்பு நாட்டின் நிதியைப் பாதிக்கலாம், புதிய பொருளாதார மீட்சியை உயர்த்தலாம் மற்றும் பணவீக்கத்தைத் தூண்டலாம் என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில் பெட்ரோல் மீது ரூ. 8ம், டீசல் மீது ரூ. 6ம் மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது..

இதனால் பெட்ரோல் விலையில் ரூ. 9.50ம், டீசல் விலையில் ரூ. 7ம் குறையும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சோசியல் மீடியாவில் அறிவிப்பொன்றை வெளியீட்டுள்ளது பல தரப்பிலும் மகிழ்வலையை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என செய்திகள் பரவியதும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!