சென்னை டூ தூத்துகுடி : எட்டு வழி சாலைக்கு ஒப்புதல்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான புதிய 8 வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்துப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பாரத் மாலா திட்டம்\’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்தால், பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வது சுலபமாகும்.

தற்போதைய மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், ஒரு லாரி சராசரியாக ஒரு நாளில் 250 முதல், 300 கி.மீ., பயணத்தையே மேற் கொள்ள முடிகிறது. வளர்ந்த நாடுகளில், சராசரியாக ஒரு நாளில், 800 கி.மீ.,யை ஒரு லாரி கடக்கிறது. அதையொட்டி உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பு களை உருவாக்கும் வகை யிலும், நாடு முழுவதும், 83 ஆயிரம் கி.மீ.,க்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

அப்படி எட்டு வழி சாலை அமைக்கப்பட்டால் சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும், விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும், தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை 6 வழி சாலை திட்டமாகவும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.13,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு தற்போது இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதால், புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் சென்னை-சேலம் இடையிலான 8 பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மற்றொரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்ரும் தகவல் வெளியாகியுள்ளது.

aanthai

Recent Posts

2022ம் ஆண்டுகான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுகான உடலியல்…

9 hours ago

இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; ‘பிஎச்டி’ஆய்வு மாணவர்களுக்கு பொருந்தாதாமில்லே!

இரண்டு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. நாடு…

9 hours ago

டெலுஷனல் டிஸ்ஆர்டர் (Delusional Disorder)எனப்படும் பிரச்சினை பற்றிய படமே ‘ரீ’!

ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும்…

9 hours ago

காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம்!- கொட்டும் மழையில் ராகுல்!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் கன்னியாகுமரியில்…

10 hours ago

பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி ஹிட் அடித்து இருக்கும் பாடல்!

'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் 'ஆயிஷா' எனும் படத்தில், 'நடனப் புயல்' பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி…

17 hours ago

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல…

2 days ago

This website uses cookies.