கொரோனா தடுப்புப் பணியை விமர்சனம் செய்த ட்விட்டர் பதிவுகள் நீக்கம்!

கொரோனா தடுப்புப் பணியை விமர்சனம் செய்த ட்விட்டர் பதிவுகள் நீக்கம்!

கொரோனா (Corona Virus) குறித்து சர்ச்சைக்குரிய வகையில், தவறான தகவல்களை பதிவிடுவதோடு, மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் பதிவிடப்படும் ட்விட்டர் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, சுனாமி போலத் தாக்கும் சூழலில், இந்தப் பெருந்தொற்றை தடுக்கத் தவறி விட்டதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் ட்விட்டர் பக்கங்களில் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கி விடுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.இதைத் தொடர்ந்து, தவறான தகவல்களையும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய பதிவுகள் கண்டறியப்பட்டு, 52 ட்விட்டர் பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், தங்கள் நிறுவனங்களின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டும், இந்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளது

error: Content is protected !!