September 27, 2021

ஆண்மையை பாதிக்கும் செல்போன்! – ஆய்வு முடிவு

இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எல்லா வகையிலும் இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோய் புரையோடும் ஆபத்துண்டு என உலக சுகாதார மையம் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளதையே யாரும் சட்டை செய்யாத நிலையில் பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைப்பதால், ஆண்களுடைய விந்தணு பாதிப்பு ஏற்பட்டு தந்தையாகும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றொரு ஆய்வு முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
cellphone impotent
மொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும் என்றும் செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்த அணுக்களை உடைத்து, மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும் என்றெல்லாம் எச்சரிக்கை வெளியான நிலையில் எக்ஸிடர் பல்கலைகழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் செல்போன்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அவரது விந்தணுக்களைப் பாதிப்பதால் அவர் தந்தையாகும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.எக்ஸிடர் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் பியோனா மேத்யூஸ் தலைமையிலான குழு, 1492 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.எனினும் இது தொடர்பான உறுதியான முடிவை தெரிவிக்க முழுமையான ஆய்வை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.