March 21, 2023

டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா?

டெல்லி போலீசில் கான்ஸ்டபிள் பதவியில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : கான்ஸ்டபிள் (எக்சிகியூட்டிவ்) – ஆண் 3902, கான்ஸ்டபிள் (பெண்) 1944 என மொத்தம் 5846 இடங்கள் உள்ளன.

வயது : 1.7.2020 அடிப்படையில் 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு (ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்) மற்றும் மருத்துவ சோதனை தேர்வு.

எழுத்துத்தேர்வு தேதி : 2020 நவ., 27 – டிச., 14.

இதர தகுதி : ஆண்கள் குறைந்தது உயரம் 170 செ.மீ., பெண்கள் 157 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 7.9.2020

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு