May 13, 2021

சிபிஎஸ்இ- யின் _2 தேர்வு தேதிகள் அறிவிச்சாச்சு!

கொரோனா வைரஸ் பரவலால தள்ளிப் போன சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு அட்டவணையையும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதில், டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கு என தனித்தனியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி

ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும்

தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர அறிவுறுத்தபட்டுள்ளது.

மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.

தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்.

குழந்தைகள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கருத்தில் கொண்டு, அசாதாரண சூழ்நிலையின் ஒருமுறை நடவடிக்கையாக, 9 மற்றும் 11-ம் வகுப்பு ஆண்டு தேர்வுகளில் தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி அடிப்படையில் மீண்டும் ஒரு தேர்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்களின் தேர்வுகள் முடிவடைந்ததா, முடிவுகள் வெளியிடப்பட்டதா அல்லது அவர்களின் தேர்வுகள் முடிக்கப்படவில்லையா? என எதுவும் இதில் பொருட்படுத்தப்படாது.

இதற்காக பள்ளிகள் ஆன்லைன், ஆப்லைன் அல்லது புதுமையான சோதனைகளை நடத்தலாம். இந்த சோதனையின் அடிப்படையில் அடுத்த நிலையை தீர்மானிக்கலாம். மாணவர்கள் தோல்வியுற்ற அனைத்து பாடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படலாம். தேர்வை நடத்துவதற்கு முன், பள்ளிகள் மாணவர்களுக்கு போதுமான தயாரிப்பு நேரம் கொடுக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தவிர்த்து பிற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி ஜூலை 13-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. டெல்லியில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.