October 24, 2021

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் இனி 6 பாடங்கள்!

அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடங்களுக்குப் பதிலாக 6 பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மொழிப்பாடங்கள் 2, சமூக அறிவியல், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு வைக்கப்படுகிறது. இது தவிர மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடம் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் முறையும் இருந்தது. தற்போது 2017-18 கல்வியாண்டு முதல் இந்த விருப்பப் பாடம் என்பது தொழில்/திறன் வளர்ப்புக் கல்விப்பாடமாக கட்டாயப்பாடமாகிறது, அதாவது 6-வது பாடம் ஒன்று படிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது. தேசியத் திறமைகள் தகுதி சட்டகத்தின்படி இன்னொரு பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

cbse mar 12

இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், “
அறிவியல், சமூக அறிவியல், கணக்கு ஆகிய தேர்வு செய்யப்பட்ட 3 பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சியடையாத பட்சத்தில், தொழில்கல்வி பாடப்பிரிவு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் கணினிமயமாக்கப்படும். ஒருவேளை, தேர்வில் தேர்ச்சியடையாத ஒரு பாடப்பிரிவில் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் விரும்பும்பட்சத்தில், அவர்கள் மீண்டும் சிறப்பு தகுதித் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

6-ஆவது பாடப்பிரிவை மாணவர்கள் 13 பாடப்பிரிவுகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது, ஹெல்த் கேர் சர்வீசஸ், பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங் அண்ட் சேல்ஸ், பிராண்ட் ஆபீஸ் ஆபரேஷன்ஸ், புட் புரொடக்ஷன்ஸ், பேசிக் அக்ரிகல்சுரல், பியூட்டி அண்ட் வெல்நெஸ், இன்ட்ரொடக்ஷன் டு டூரிஸம், பைனான்ஷியல் மார்க்கெட், ஆட்டோ மொபைல் டெக்னாலஜி, செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, டைனமிக்ஸ் ஆஃப் ரீடெய்லிங் ஆகியவைகளில் இருந்து தேர்வு செய்யலாம் என்று அந்த சுற்றறிக்கையில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

அதாவது இன்டர்னல் அசஸ்மென்ட்/பிராக்டிகல் ஆகியவற்றிற்கு 50 மதிப்பெண்கள்.  போர்டு பரீட்சை மற்றும் பிராக்டிக்கலில் மாணவர்கள் தலா 33% மதிப்பெண்கள் எடுத்தால் அந்த பாடத்தில் பாஸ் என்று நிர்ணயிக்கப்படுகிறது.