சிபிஎஸ்இ : 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி தொடக்கம்!

சிபிஎஸ்இ : 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி தொடக்கம்!

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் முடிந்த அளவுக்கு கற்று வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநில பாடத்திட்ட தேர்வுகளுக்கு முன்னதாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதனால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதியை அந்த மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில், தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிவிப்பில், “சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளோம். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!