சிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்! – அதிர்ச்சியில் பிரதமர்!!
இந்தியாவின் உயர்ந்த இன்வெஸ்டிகேட்டிவ் அமைப்பான சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே அண்மைக் காலமாக பிரச்னை ஏற்பட்டு உள்ளது. தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கை முடித்துத் தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீது பதிலுக்கு அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தின.
இவ்விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சிபிஐ அதிகாரி கள் சோதனை வருகின்றனர். மேலும் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் புகார் தொடர்பாக போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதனிடையே அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் தன்னை சந்திக்கும் படி பிரதமர் மோடி சம்மன் அனுப்பியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரிட மும் விசாரித்த பிறகு, உயரதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று நடவடிக்கை எடுக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.