October 16, 2021

காவிரி ; வல்லுநர் குழு அறிக்கையை நம்பாதீங்க!- அன்புமணி அப்செட்!

தமிழகத்தை விட கர்நாடகத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகத்தில் வறட்சியால் அதிக பரப்பளவில் பயிர்கள் கருகியுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளது” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

anbumani oct 17

பாமக இளைஞரணித் தலைஅவ்ர் அன்புமணி ராம்தாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி பாசனப் பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்த வல்லுனர் குழு அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலுமே நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வல்லுனர் குழு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. மத்திய வல்லுனர் குழுவின் இந்த பயனற்ற அறிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது.!

மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையிலான வல்லுனர் குழு, உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,‘‘ பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இரு மாநிலங்களிலுமே நிலைமை மிகவும் மோசமாகத் தான் இருக்கிறது. தமிழகத்தை விட கர்நாடகத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகத்தில் வறட்சியால் அதிக பரப்பளவில் பயிர்கள் கருகியுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளது. காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு தொடர் துரோகம் செய்து வரும் மத்திய அரசு, இக்குழு மூலம் அடுத்த துரோகத்தை இழைத்துள்ளது.!

மத்திய வல்லுனர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஏற்க முடியாது. கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள நிலைமை வல்லுனர் குழு மேலோட்டமாக ஆய்வு செய்திருக்கிறதே தவிர, ஆழமாக ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை. கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், அங்கு தான் அதிக பரப்பளவில் பயிர்கள் கருகியிருப்பதாகவும் வல்லுனர் குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாததாகும். கர்நாடகத்தில் கடந்த 2014, 2015 ஆகிய இரு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் எண்ணிக்கை 1583. இவர்களில் 14%, அதாவது 210 பேர் மட்டுமே காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், தமிழகத்தில் இதே காலத்தில் 1195 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 600&க்கும் அதிகமான உழவர்கள் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதை மத்தியக்குழு கருத்தில் கொள்ளவில்லை.
தண்ணீர் இல்லாததால் கர்நாடகத்திற்கு அதிகபாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதும் உண்மையல்ல.!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் அணைகளில் இருந்த தண்ணீரைக் கொண்டு ஒரு போக சாகுபடியை ஏற்கனவே வெற்றிகரமாக முடித்து விட்டது. அதற்கு முன்பாகவே நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வகையில் கோடை சாகுபடியையும் செய்திருக்கிறது. இரண்டாம் பருவ சாகுபடியும் பெரும்பாலான பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக நிலைமை அப்படியல்ல. காவிரியில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சம்பா பருவ நெல் நடவு முடிவதற்கு முன்பே தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் சம்பா பயிரும் முற்றிலுமாக பாதிக்கப்படும். இந்த உண்மைகளையெல்லாம் ஆய்வு செய்யாமல், அழைத்துச் செல்லப்பட்ட பகுதிகளில் கண்ட காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு கர்நாடகம் தான் அதிக பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது என்று வல்லுனர் குழு கூறுவது முறையல்ல.!

இதற்கெல்லாம் மேலாக வல்லுனர் குழுவின் ஆய்வே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு செய்த சதி தான். இரு மாநிலங்களிலும் உள்ள அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு முதலில் வினாடிக்கு 10,000 கன அடி வீதமும், பின்னர் முறையே 12,000 கனஅடி, 6,000 கனஅடி, 2,000 கனஅடி வீதமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க ஆணையிட்டது. இதற்காக எந்த வல்லுனர் குழுவின் பரிந்துரையையும் உச்சநீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி, தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பது பற்றி முடிவெடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; அதன் உறுப்பினர்களை இரு மாநிலங்களுக்கும் அனுப்பி நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இது நடந்திருந்தால் தமிழகத்திற்கு காவிரியில் தடையின்றி தண்ணீர் கிடைத்திருக்கும்.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறிவிட்ட மத்திய அரசு, அதற்கு மாற்றாக மத்திய நீர் ஆணையக்குழுவை அனுப்பலாம் என்ற யோசனையை உச்சநீதிமன்றத்தின் மீது திணித்து செயல்படுத்த வைத்தது. அதன்படியே மத்திய அரசின் விருப்பத்தை வல்லுனர் குழு நிறைவேற்றி வைத்திருக்கிறது. இதன்மூலம் இச்சிக்கலில் தமிழகத்திற்கு இன்னொரு துரோகம் பரிசாக கிடைத்துள்ளது.!

வல்லுனர் குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் கர்நாடக அரசும், மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தும். தண்ணீர் கிடைக்காவிட்டால் சம்பா பயிர் முற்றிலுமாக கருகிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, தமிழகத்தில் காணப்படும் நிலைமையை உச்சநீதிமன்றத்திற்கு உணர்த்தி சம்பா பயிருக்கு போதிய தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.!” என்று கேட்டுக் கொண்டுள்ளார்