Exclusive

அன்னதானத்தில் ஜாதி பாகுபாடு..:செயல் அலுவலர், சமையல்காரர் சஸ்பெண்ட்!

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய சம்பவத்தில் செயல் அலுவலர், சமையல்காரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ளது தலசயன பெருமாள் கோவில். 108 திவ்விய தேசங்களில் 63-வது திவ்வியதேசம் எனப் போற்றப்படும் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ இன மக்களைச் சாப்பிட விடாமல் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அன்னதான பாகுபாடு குறித்து வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பிய நரிக்குறவ பெண்ணுடன் அமைச்சர் சமமாக உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரடியாகச் சென்று அந்த நரிக்குறவ பெண்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் மீண்டும் நரிக்குறவ பெண்களைத் தரையில் உட்கார வைத்து அன்னதானம் வழங்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கடந்த 24-ம் தேதி கோவிலில் முறையாக அன்னதானம் நடைபெறுகிறதா என ஆய்வு செய்தார். அப்போது 9 நரிக்குறவ பெண்களைத் தரையில் அமர வைத்து உணவு பரிமாறப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் மேலாளர் சந்தானம் என்பவரை அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான முறையில் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்துச் சென்றார்.

இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆணையர் சேகர்பாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அந்த கோவிலில் விசாரணை நடத்தினார். செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, சமையலர் குமாரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

aanthai

Recent Posts

குருமூர்த்தி – விமர்சனம்!

காணாமல் போகும் 5 கோடி ரூபாய் பணப்பெட்டியைத் தேடிப் போலீஸ் துரத்தி ஓடுவதும் பெட்டி கைமாறிக் கைமாறி கண்ணாமூச்சி ஆடுவதும்…

31 mins ago

.“ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு "ரத்த சாட்சி".…

16 hours ago

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழாத் துளிகள்!

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம்…

16 hours ago

‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸாமே!

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி புரொடக்‌ஷனின் 'வரலாறு முக்கியம்' திரைப்படம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது.…

2 days ago

டீவி சீரியல் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை – வடகொரியா குரூரம்!

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரிய சினிமாக்கள், நாடகங்கள் இசை…

2 days ago

லவ் டுடே படமும் பெண்ணியமும்!

இன்றைய நவீன தலைமுறை இளைஞர்களுக்கான நவீன காதல் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்ட படம் லவ் டுடே. சரி, இளைய…

2 days ago

This website uses cookies.