யூடியூபர் மாரிதாஸ் மீது மதுரை போலீஸ் பதிவு செய்த எஃப்ஐஆர் ரத்து!

யூடியூபர் மாரிதாஸ் மீது மதுரை போலீஸ் பதிவு செய்த எஃப்ஐஆர் ரத்து!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட்டைப் பதிவு செய்ததற்காக மதுரை நகர சைபர் கிரைம் போலீஸார் யூடியூபர் மாரிதாஸ் மீது பதிவு செய்த எஃப்ஐஆரை ஐகோர்ட் மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ், வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறார். இவர் maridhas Answers என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். திக திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி (emoji) போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என பதிவிட்டிருந்தார்.

இது சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், மாரிதாஸ் தன்னை விடுவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று ஐகோர்ட் மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் காவல் துறையினர் உரிய முறையில் ஆவணமாக பதிவு செய்யாமல், வீடியோவை மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, இரு தரப்பினருக்கு இடையை மோதல் ஏற்படும் வகையில் மாரிதாஸின் பதிவு இல்லை. அதனுடன் அதை சில மணிநேரங்களில் பதிவை நீக்கி விட்டார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

error: Content is protected !!