கார்டூனிஸ்ட் பாலா கைது!- நெல்லை கலெக்டர் புகார் எதிரொலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால், குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேலிச்சித்திரம் வரைந்த சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கலெக்டர், போலீஸ் அதிகாரி  மற்றும் முதல்வரின் படங்களை கொண்ட அந்த கேலி சித்திரம் தம்மை அவதூறு செய்வது போல உள்ளதாக திருநெல்வேலி கலெக்டர் சந்தீப்நந்தூரி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பாலா, பிரபல வார இதழான குமுதம் நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ட்டூனிஸ்டாக பணியாற்றி வந்தவர் அப்பணியில் தன்னை விடுவித்துக் கொண்டு லைன்ஸ் மீடியா என்னும் வெப்சைட் தொடங்கி தன் கேலிச் சித்திரத்தையும், பல்வேறு படைப்புகளையும் வெளியிட்டு வந்தார்.

அந்த  வகையில்  தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு  அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.

அந்தக் கட்டுரையில், ”கந்து வட்டி கும்பலைவிட புகார் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், இரு குழந்தைகளின் தகப்பனாக வயிறு எரிந்து சொல்கிறேன். பற்றிய நெருப்பு உங்களை தலை முறையாக விடாது. மனசும் உடம்பும் எரியுது பாவிகளா,” என்றும் காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

கண்டவுடன் பார்ப்போரிடம் நெருப்பு பற்றி  கொள்ளும் வகையில் இருந்த  அந்த கார்ட்டூன் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சாதாரண உடையில் சென்னை கோவூருக்கு இன்று வந்த காவல்துறையினர் நான்கு பேர், கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். அவரை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றனர். விசாரணைக்காக அவரை திருநெல்வேலிக்குக் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

aanthai

Recent Posts

பத்து தல விமர்சனம்!

சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து…

8 hours ago

போப் பிரான்சிஸ் ரோம் மருத்துவமனையில் அனுமதி!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

8 hours ago

பொன்னியின் செல்வன் – 2ம் பாகம்- இசை & ட்ரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம்…

9 hours ago

மூன்றாவது உலகப்போர் மூளும் : பிறகு?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா…

10 hours ago

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு.

1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160…

1 day ago

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை – பேடிஎம் விளக்கம்!.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள்…

1 day ago

This website uses cookies.