September 28, 2022

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் – ஐகோர்ட் உத்தரவு!

கொரோன இரண்டாம் அலைக்கு மத்தியில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலை அடுத்து தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான இந்த தேர்தலை நடத்தினால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என கருதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க கோரி மருத்துவா்கள் நக்கீரன், பாண்டியராஜ் உள்பட பலா் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், அதற்கு எதிராக ஐகோர்ட் எப்படி உத்தரவிட முடியும்?

இதே சூழலில் தான் பஞ்சாப், உ.பி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக பின்பற்றி தோ்தலை நடத்துவதற்கு நாங்கள் உத்தரவிடலாம். இல்லையென்றால், மனுதாரா் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்”. என கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது.