June 24, 2021

ஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு

ந்த கொரோனா & ஊரடங்குக் காலத்தில் கூட நாடெங்கும் தினந்தோறும் பைக், கார் விற்பனை அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. ஒரு வீட்டில் ஒரு வாகனம் இருந்த நிலைமை மாறி, ஒரு வீட்டில் பைக், கார், ஸ்கூட்டி என வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரும் வாகனம் ஓட்ட உரிமம் பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அதிகமாக குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் ஒருவரது ஓட்டுநர் உரிமத்தை மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதாக புகார்கள் அதிகமாக வருகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அங்கீகாரம் பெற்ற தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்து சான்று பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ஆம்.. இது நாள் வரை ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டும் என்றால், ஏதேனும் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த பின்பு மாவட்ட ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை குறிப்பிட்ட விதிமுறைகள் படி இயக்கி காட்ட வேண்டும். சரியான விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை முறையாக இயக்கினால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். ஆனால் ஜூலை 1ம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருவதாக மத்திய சாலை போகுவரத்துதுறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உரிய அங்கீகாரம் பெற்ற மத்திய அரசின் பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க “simulator” எனப்படும் மாதிரி வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் நன்கு கற்றறிந்த பின்பு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது பயிற்சி பெற்ற நபர் ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு நடைபெறும் சோதனையில் பங்கேற்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திறமையான ஓட்டுனர்கள் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் ஏராளமான விபத்துகள் நடப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இந்த புதிய நடைமுறைகள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.