October 25, 2021

செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்ட பெண்களுக்கு புற்றுநோய்?

பெண்களின் செழிப்பான அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை மார்பகங்கள். அவை அளவோடு இருந்தால்தான் அழகு. அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அங்கே அழகு கொஞ்சம் `மிஸ்ஸிங்’ ஆகிவிடும்.சிலபெண்களுக்கு வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சி காணப்படாது. இப்படிப்பட்டவர்கள் பெரிய மார்பகத்திற்காக ஏங்குவார்கள்.இப்படிப்பட்டவர்கள்  பல நாடு பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இத்தகைய மார்பக மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் சிலருக்கு ‘அனபிளாஸ்டிக் லார்ஜ் செல் லிம்போமா’ (ஏ.எல்.சி.எல்)  என்ற புற்று நோய் தாக்க வாய்ப்புள்ளதாக 2011ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

cancer mar 23

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பான எஃப்.டி.ஏ (FDA) அளித்த அறிக்கையில் ‘‘இதுவரை கிடைத்த தகவலின்படி அமெரிக்காவில், மார்பக மாற்று அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்ட 9 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அமெரிக்க சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களின் புற்றுநோய்க்கு மார்பக மாற்று அறுவை சிகிச்சைதான் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 359 பேர் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுவரை அமெரிக்காவில் 359 பெண்கள் இந்த சிகிச்சை காரணமாக ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் மரணமடைந்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையம் இந்த புற்று நோயை ‘மார்பக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் அரிய வகை டி-செல் லிம்போமா’ என்று அழைக்கிறது. மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிலருக்கு சருமத்தின் கீழ் ‘செரோமா’ எனப்படும் நீர்க்கட்டிகள் ஏற்படும். அவற்றை நீக்க மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்வர். அத்தகைய பெண்களுக்கு ஏ.எல்.சி.எல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எப்.டி.ஏ. கூறுகிறது. சரியான தகவல்கள் கிடைக்காத காரணத்தால் உலக அளவில் இதுவரை ஏ.எல்.சி.எல் புற்று நோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை எனவும் எப்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு, செயற்கை மார்பகம் நீக்கப்படுகிறது. சிலருக்கு கதீர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையும் தேவைப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய அரசின் மருத்துவ நிர்வாகம், தங்கள் நாட்டில் 46 பேர் ஏ.எல்.சி.எல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 3 பேர் மரணமடைந்தாகவும் அறிவித்தது.

மேலும் பிரான்ஸ் நாட்டின் தேசிய புற்றுநோய் சிகிச்சை நிறுவனம், 2 ஆண்டுகளுக்கு முன்பே ஏ.எல்.சி.எல் புற்றுநோய்க்கும் செயற்கை மார்பக மாற்று சிகிச்சைக்கும் தொடர்புள்ளதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.பிரான்ஸில் 2011ம் ஆண்டு முதல் இதுவரை 18 பேர் ஏ.எல்.சி.எல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் அரிய வகை புற்றுநோய் என்பதால் செயற்கை மார்பகம் பொருத்தியுள்ள அனைத்து பெண்களும் அதை நீக்க தேவையில்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.