September 27, 2021

24 மணி நேரமும் இனிமே சினிமா தியேட்டர், ஹோட்டல், பேங்க் எல்லாம் இயங்க பர்மிஷன் உண்டு!

டெல்லியில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவது உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இடம்பெற்றுள்ளது.

24 hrs

மேலும், வங்கி, இன்சூரன்ஸ், தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி குறைந்தது 10 ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் தங்கள் சேவையை 24 மணி நேரமாக விரிவுபடுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரவு நேரங்களில் பெண் ஊழியர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வாறு இரவுப் பணிக்கு வரும் பெண் ஊழியர்களுக்கு கண்டிப்பாக வாகன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக

இது குறித்து விசாரித்த போது, “நாட்டிலுள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வராது என்றும், மால்கள், சினிமா தியேட்டர்கள், ஐ.டி நிறுவனங்கள் 24 மணி நேரமும், வருடத்தின் 365 நாட்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படும். இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. இதை மாநிலங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் இல்லையென்றால் மாற்றங்கள் கொண்டு வரலாம்.ஆனாலும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பான மற்ற சட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். சேவைத் துறையின் வருமானம் உயர இந்த மாற்றம் உதவும். அதே சமயம் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பான மற்ற சட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். சேவைத் துறையின் வருமானம் உயர இந்த மாற்றம் உதவும். இப்போது ஆனாலும் தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் கீழ் வராத நிறுவனங்கள், அச்சு இயந்திர கடைகள், வங்கிகள், சினிமா அரங்குகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளடக்கிய அனைத்திற்கும் அனுமதி வழங்க இந்த வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சட்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டிற்கும் பொருந்தாது” என்று தெரிவித்தனர்~