மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்த நவீனமயமாகி வரும் உலகில் அதிகரித்துக் கொண்டே போகும் ஜன நடமாட்டம் மற்றும் நெருக்கடிகளை விரும்பாத மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதுநாள் வரை நாம் வாழும் பூமி உருண்டைக்குள் உள்ள நாடுகளுக்கு மட்டுமே சுற்றுலா சென்று வந்த மனித இனம் இனி விண்வெளியிலும் சுற்றுலா செல்ல பல்வேறு நாடுகள் பலவித திட்டங்கள் வகித்து வருகின்றன. அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, விண் வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்த திட்ட தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா நியமிக்கப்பட்டு உள்ளார்.

3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இதுவாகும். திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள், மனிதர்கள் செல்லும் விண்கலம் அனுப்பப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு பெண் வீரர் உள்பட 3 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல உள்ளார்கள். 7 நாட்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள். பின்னர், அரபிக் கடலை விண்கலம் வந்தடையும்.

இந்த ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

மனிதர்களை அனுப்பும் முன்பு, ககன்யான் திட்டம் இரண்டு முறை ஆளில்லாமல் செயல்படுத்தப்பட உள்ளது. ககன்யான் திட்டம் நிறைவேற்றப்பட்டால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!