September 17, 2021

பட்ஜெட் 2017 – 18 = என்ன ஸ்பெஷல்?

இந்தியாவின் முதல் பட்ஜெட் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1860ல் தாக்கல் செய்யப்பட்டது. 1860 ஏப்ரல் 7ம்தேதி இந்தியா கவுன்சிலின் நிதித்துறை உறுப்பினரான ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் அச்சடிப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை, டெல்லி போலீஸ், மத்திய உளவுத்துறையினர் ஆகியோர் கொண்ட மூன்று அடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பார்லிமெண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அவை வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பார்லிமெண்ட் வளாகத்தை ஒட்டி மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள ‘நார்த் பிளாக்’ கட்டிடத்தின் கீழ்தளத் தில் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 15 நாள்களுக்கு முன்னதாக அச்சுப் பணி தொடங்கப் படுகிறது. நிதி அமைச்சக அலுவலர்கள் உட்பட அச்சடிப்புப் பணி யில் ஈடுபடும் சுமார் 200 பேர் மற்றும் பணியாளர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை சுமார் 15 நாள்களுக்கு ’சிறை’ வைக்கப்படுகிறார்கள்.

budget feb 1  b

நிதித்துறை அலுவலர்கள் விரும்பி ஏற்கும் இந்தச் ‘சிறை’ யில் சுமார் 16 நாள்களுக்கு தனித் தீவாக வாழ வேண்டும். இடையில் ஏதேனும் கட்டாயம் ஏற்பட்டால் குடும்பத்தாருடன் தொலைபேசி யில் ஸ்பீக்கரில் மட்டுமே பேச முடியும்

இந்த பணிக் காலத்தில் காலையில் விழிப்பது முதல் உறங்குவது வரை மூடிய கதவுகளுக்கு உள்ளேயே வாழ வேண்டும். தேநீர் முதல் உணவு வரை தேவையான பண்டங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்படும். அவை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும்.

இந்த கதவுகளுக்குள் பாதுகாப்பு போலீசாருக்கும் அனுமதி இல்லை. சில நேரங்களில் ஊழியர் களின் உடல்நலம் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு போலீஸாரின் கண்காணிப்பில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். பட்ஜெட் அச்சடிப்புப் பணி களை மேற்பார்வையிட வரும் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோதனைகளுக்கு உள்ளாக வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்போது மொபைல், லேப் டாப் உட்பட எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் அமைச்சர் பயன்படுத்த அனுமதியில்லை. கடைசி கட்டமாக அமைச்சரின் உரை மற்றும் செய்திக்குறிப்புகள் அச்சடிக்கப்படும். இவற்றை தயார் செய்ய மத்திய அரசின் செய்தி தொடர்புத் துறை அதிகாரிகள் சிலரும் ஓரிரு நாள்கள் ‘சிறைபட” வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் லண்டனின் விடியல் நேரத்தை மனதில் வைத்து மாலை ஐந்து மணிக்கு பட்ஜெட் தாக் கல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரத் துக்கு பிறகும் இந்த வழக்கம் தொடர்ந்தது. கடந்த 2001- ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆங்கிலேயர் நடைமுறையை மாற்றினார். இந்திய நாட்டின் பட்ஜெட்டை நமது நேரத்துக்கு ஏற்ப காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு, அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. அதிக அளவில் அல்வா தயாரித்து, அவை நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக்கில் மிகவும் பத்திரமாக எடுத்து வைக்கப்படும். பிறகு பட்ஜெட் தயாரிக்கும் பணி நடந்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், இந்த அல்வாவை, மத்திய நிதி அமைச்சர், பட்ஜெட் தயாரிக்க உதவிய அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் கொடுப்பார்.

எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் முன்பும் இனிப்பு செய்வது இந்தியர்களின் பாரம்பரியம். அதன் அடிப்படையில் தான் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. ஆனால், ஏன் குறிப்பாக அல்வா கிண்டுகிறார்கள் என்று கேட்டால் பதில் யாருக்கும் தெரிய வில்லை.

அடுத்து, இதுவரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26 அல்லது 27ம் தேதியில் ரயில்வே பட்ஜெட்டும், பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது தான் வழக்கம்.

இந்த ஆண்டு அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தின் முதல் நாளிலேயே ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இனி இன்று சப்மிட் செய்யப்பட்ட பட்ஜெட் ஹைலைட்ஸ்

budget feb 1 a

பத்து முக்கிய கருப்பொருட்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுதான் இந்தப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

1.விவசாயிகள், 2.கிராம மக்கள். 3.இளைஞர்கள், 4.ஏழை மற்றும் பின் தங்கிய மக்களுக்கு சுகாதாரம், 5. உள்கட்டமைப்பு, 6.வலுவான நிறுவனங்களில் நிதி முதலீடு, 7.விரைவான நம்பகத்தன்மை, 8.பொது சேவைகள், 9.நிதானமான நிர்வாகம், 10.நேர்மையான வரி நிர்வாகம்

* ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.

* அமெரிக்காவின் நிதிக் கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.

* கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.

*  வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.

* பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசு செயல்படுத்தியுள்ளது.

* ஜிஎஸ்டி-யில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.

* ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் காட்டும் 76 லட்சம் பேரில், 56 லட்சம் பேர் மாத ஊதியம் பெறுவோர்.

* பணப்புழக்கம் அதிகம் இருப்பதாலேயே எளிதாக வரி ஏய்ப்பு செய்ய முடிகிறது.

* 2016 நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை டெபாசிட்.

* ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள வருமானத்துக்கான வரி மீது 10 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.

* ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கு மேல் இருந்தால் 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

* 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரி குறைப்பால் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி வராது.

* தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

* கட்சிகள் இதுவரையில், ஒருவரிடம் இருந்து ரூ.20,000 வரை ரொக்கமாக நிதி பெற அனுமதி இருந்தது.

* கட்சிகளுக்கு காசோலை, மின்னணு முறை மூலம் மட்டுமே நன்கொடை தர வேண்டும்.

* அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசியல் கட்சிகள், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும்.

* 100 நாள் வேலைத் திட்டத்தைக் கண்காணிக்க விண்வெளித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

* 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.

* ஏற்கெனவே 10 சதவிகிதமாக வரி இருந்த நிலையில், 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

* தனிநபர் வருமன வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும்.

* 2-ம் நிலை நகரங்களில் குறிப்பிட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

* ஆண்டு வர்த்தகம் ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு வரி, 25 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.

* 1.5 லட்சம் சுகாதார துணை மையங்கள், சுகாதார நல மையங்களாக மாற்றப்படும்.

* ரூ.3 லட்சத்துக்கும் மேல் உள்ள ரொக்க பணப் பரிவர்த்தனைக்குத் தடை விதிக்க முடிவு.

* அரசியல் கட்சிகள் நிதிபெறுவதி்ல் வெளிப்படைத் தன்மை தேவை.

* அரசியல் கட்சிகள் ஒருவரிடம் இருந்து இனி ரூ.2,000 மட்டுமே ரொக்கமாகப் பெற முடியும்.

* 2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு.

* சிட்ஃபண்ட் மோசடிகளைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

* வறட்சியைச் சமாளிக்க, நாடு முழுவதும் ஐந்து லட்சம் குளங்கள் ஏற்படுத்தப்படும்.

* 1.50 லட்சம் கிராமங்களில் இணையதள சேவை.

* 2019-க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ- டாய்லெட் வசதி ஏற்படுத்தப்படும்.

* தலைமைத் தபால் அலுவலகத்தி்ல் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சிறுதொழில் கடன் வழங்க ரூ.2.44 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

* ராணுவத்துக்கான நிதி ரூ.2,74,11 கோடி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 50 ஆயிரம் கிராம ஊராட்சிகள் வறுமை இல்லாதவையாக மேம்படுத்தப்படும்.

* வங்கிக்கடனைத் திருப்பித் தராதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய சட்டம் கொண்டுவரப்படும்.

* இளைஞர்கள் அறிவியலில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பினாலும் சொத்து பறிமுதல் செய்யப்படும்.

* நிதிப் பற்றாக்குறை, நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.2 சதவிகிதமாக இருக்கும்.

* புதிதாக இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வகையில் புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும்.

* போக்குவரத்துத் துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

* அந்திய முதலீட்டு அனுமதி வாரியம் கலைக்கப்படும்.

* ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 200-லிருந்து 500 ஆக அதிகரிக்கப்படும்.

* வங்கிகளில் சட்டவிரோத டெபாசிட்டுகளைத் தடுத்திடும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

* ஆதார் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும்.

* மூத்த குடிமக்களுக்கு 8 சதவிகிதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்.

* உயிர்காக்கும் மருந்துகள், கருவிகளுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நுண் சொட்டு நீர்ப் பாசனத்துக்கு தொடக்க மூலதனம் ரூ.5,000 கோடி நிதி.

* அனைத்து உயர்கல்வித் தேர்வுகளையும் சிபிஎஸ்இ உள்ளிட்ட அமைப்புகள் நடத்தாது.

* உயர்கல்வித் தேர்வுகளை நடத்த தேசியத் தேர்வு முகமை ஏற்படுத்தப்படும்.

* உயர்கல்வித்துறையின் பல்கலைக்கழக மானியக் குழுவில் சீர்திருத்தம் செய்யப்படும்.

* கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

* வெளிநாட்டு மொழிக் கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

* மூன்று கோடி இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

* பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி ஒதுக்கீடு (கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி)

* மருத்துவ சாதனங்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்கப்படும்.

* கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

* எஸ்.சி பிரிவு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.52,393 கோடி ஒதுக்கீடு (கடந்த அண்டு ரூ.38,833 கோடி)

* இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதிய முறை உருவாக்கப்படும்.

* நாட்டில் 2019-ம் ஆண்டுக்குள் 50,000 கிராமப் பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

* 2017-18 நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவிகிதமாக இருக்கும்.

* கச்சா எண்ணெய் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவது சவாலாக உள்ளது.

* கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,17,000 கோடி (கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி)

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகளிர் பங்களிப்பு 55 சதவிகிதம் உயர்வு.

* அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

* பெண்களின் மேம்பாட்டுக்காக கிராமங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* 100 நாள் வேலைத் திட்டத்துக்காக முன்பை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஊரக, வேளாண் சார்ந்த துறைகளுக்கு 2017-18-ல் ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு

* வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.

* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.

* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.

* சிறு, குறு விவசாயிகள் தடையின்றி எளிதாகக் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.

* நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.

* வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.

* விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)

* உலகப் பொருளாதார வளர்ச்சி 2017-ல் 3.4 ஆக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.

* உலகப் பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் நிலையாக உள்ளது.

* பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)

* பல்லாண்டு வரி ஏய்ப்பைத் தடுக்க, பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவியுள்ளது.

* பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க, புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18-ல் 7.7 சதவிகிதம் அதிகரிக்கும்.

* 500 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்

* 2018 க்குள் 3500 கி.மீ., ரயில் பாதை

* ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி

* அனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி

* 2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி

* 7000 ரயில் நிலையங்களில் சூரிய மின் வசதி

* ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு வரி கிடையாது

* ரயில்வே துறைக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு

* தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்