March 26, 2023

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் ஜாப் ரெடி!!

நம் நாடு முழுவதும்  பி. எஸ். என். எல். என்று குறிப்பிடப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (ஜே.டி.ஓ.,) பிரிவில் காலியாக இருக்கும் 198 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

காலியிட விபரம்: பி.எஸ்.என்.எல்.,லின் மேற்கண்ட இடங்கள் சிவில், எலக்ட்ரிகல் ஆகிய பிரிவு களில் உள்ளன. இவை நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நிரப்பப்பட உள்ளன என்பதை அறியவும். தமிழகத்தில் இத்தகைய இடங்கள் 13ஐ உள்ளடக்கியவையாகும்.

வயது : விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில் அல்லது எலக்ட்ரிகல் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : GATE 2019 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த இடங்களுக்கு நிரப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000/-ஐ பி.எஸ்.என்.எல்.,லின் ஜே.டி.ஓ., பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் 
: 2019 பிப்., 11

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு!