அஞ்சே நாளில் ரெடியான 110 அடி நீள பாலம்!

அஞ்சே நாளில் ரெடியான 110 அடி நீள பாலம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே முன்சாரி-மிலம் சாலையில் உள்ள ஒரு முக்கியமான பாலம் கடந்த ஜூன் 22 அன்று இடிந்து விழுந்தது. இந்த பாலத்தை எல்லை சாலை கட்டுமான நிறுவனமான பி.ஆர்.ஓ (BRO) 5 நாட்களிலேயே மீண்டும் கட்டி முடித்துள்ளது.

இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் இந்த பாலம் விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 22ம் தேதி அந்த பாலத்தின் மீது மண்ணை தூர்வாரும் எந்திரம் சென்ற போது பாலம் இடிந்து விழுந்தது. தற்போது பாலம் விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமையன்று போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

110 அடி நீளமுள்ள இந்த பாலம், சுமார் 30 டன் எடையை தாங்கும் திறன் கொண்டது. இந்த பாலம் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 64 கி.மீ நீளமுள்ள முன்ஸ்யாரி-மிலம் சாலையின் ஒரு பகுதியாகும். இந்த சாலைக்கான பணிகள் முடிந்துவிட்டால் சீனாவை ஒட்டிய இந்திய எல்லைக்கு ராணுவ தளவாடங்களை எளிதாக கொண்டு சென்றுவிட முடியும். இது குறித்து பி.ஆர்.ஓ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் : இந்த பாலம் எல்லையிப்பகுதியில் மிக முக்கியமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அதை விரைவாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொதுவாக இதுபோன்ற ஒரு பாலம் கட்ட ஒரு மாத காலம் ஆகும். ஆனால் நாங்கள் வெறும் 5 நாட்களில் அந்த பாலத்தை கட்டி முடித்து புதிய சாதனை படைத்துள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினார்.

Related Posts

error: Content is protected !!