December 9, 2022

ஹிஜாப் பிரச்னையே முடியலை : அதற்குள் பைபிள் மூலம் புது சர்ச்சை!

ல்விக் கூடங்களில் முதலில் சர்ச்சையை கிளப்பிய கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதிக் கடிதம் கேட்டுள்ளது அம்மாநிலத்தின் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெங்களூரில் உள்ள க்ளாரன்ஸ் தனியார் பள்ளியின் 11-ம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில், ” மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் கொண்டு வருவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதைத் தெரிவிக்கக் கூறியுள்ளது. பள்ளியில் நடைபெறும் காலை பிரார்த்தனைக்காகவும், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆன்மிக நலத்துக்காகவும் பைபிளைக் கொண்டுவர சம்மதம் என்பதைத் தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.” இதற்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இந்து ஜனஜக்ருதி சமிதியின் மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், “கிறிஸ்தவப் பள்ளிகளில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் படிக்கிறார்கள். அங்கு பைபிளைக் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பள்ளியின் முதல்வர் ஜெர்ரி ஜார்ஜ் அளித்துள்ள விளக்கத்தில், ” இது கிறிஸ்தவ பள்ளி. இங்கு பைபிள் மூலம் அடிப்படையிலான கல்வியையே வழங்குகிறோம். எங்கள் பள்ளியின் கொள்கைகளில் சிலருக்கு வருத்தம் உள்ளதை நிர்வாகம் புரிந்துகொள்கிறது. நாங்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புபவர்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம். இதற்காக வழக்கறிஞர்களின் ஆலோசனையை பெறவுள்ளோம்” என்றார்.

கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் குர்தா எனப்படும் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அம்மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது