ஓலா, உபர் ஆகிய வாகனச் சேவைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி!

ஓலா, உபர் ஆகிய வாகனச் சேவைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி!

ப்போதெல்லாம் ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்கும், பயணியருக்கும் இடையேயான பாலமாக ‘ஓலா, ஊபர்’ போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் செயலியில் செல்ல வேண்டிய இடம் குறித்து பதிவு செய்தால் வீடு தேடி ஆட்டோ வந்து நம்மை அழைத்துச் செல்லும். இந்த சேவைக்காக ஆட்டோ டிரைவர்களின் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை ஓலா, ஊபர் நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன. இதுபோல ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் ஆட்டோ சவாரிக்கு அடுத்த ஆண்டு ஜன., 1 முதல் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது.

இது குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த்துறை நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல் ஆப்லைனிலோ அல்லது நேரிலோ ஆட்டோ சேவையைப் பெறுவதற்கு இந்த வரி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் Ola,Uber போன்ற ஆட்டோ சேவைகளின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் சுமையாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!