October 18, 2021

நட்டியின் ‘போங்கு’ எப்பூடி? – திரை விமர்சனம்

தமிழ் சினிமா ரசிகர்களில் அளவுக்கதிகமான ஆர்வமும், தேடலும் கொண்டவர்கள் ஜாஸ்தி. இப்போதெல்லாம் ஹாலிவுட் படங்கள் எந்த பட சாயல் என்பதை ரிலீஸான அரைமணி நேரத்தில் கண்டு பிடித்து வெளிப்படுத்தி விடுகிறார்கள். அப்படியான ரசிகர்களில் பாதி பேருக்கு பிடிக்கும் படியான ஒரு சினிமாவை ‘ போங்கு’ என்ற பெயரில் கொடுத்துள்ளார்கள்.

ரேர் பீஸ் என்ற புது அடைமொழியை தாங்கியுள்ள நட்டி, அர்ஜூன், ருஹி சிங் (கதாநாயகி) மூவரும் வெளிநாட்டு கார் கம்பெனி ஒன்றில் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் . அப்போது ஒரு கார் திருட்டு போன விவகாரத்தில் வேலையிழந்து ஜெயிலுக்கே போய் விட..அதனால் பிளாக் லிஸ்ட்டில் இடம் பெற்று விட்ட இவர்களுக்கு வேறு எந்த கம்பெனியும் வேலை கொடுக்கவில்லை.அதே சமயம் ஜெயில் தோஸ்த் ஒருவன் மூலமாக சென்னைக்கு வந்து அங்குள்ள ஒரு கார் திருட்டு புரோக்கருக்காக காரை கடத்ல் வேலை கிடைக்க வேறு வழியில்லாமல் அதை ஏற்று தி?ற்ம்பட செய்கிறது நட்டி அன் கோ.

முதல் ஹைடெக்கான் முயற்சியிலே அந்த நகைக்கடை ஓனரின் காரை இலாகவாகமாக திருடி எடுத்து வந்து அக்கார் டோரை ரிப்பேருக்காக ஓப்பன் செய்தால் அதில் ஒளித்து வைக்கப்பட்ட பல கோடி கருப்பு பணமும் அவர்கள் கைக்கு வருகிறது..

அடேங்கப்பா .. போங்கு ஆட்டத்தை இதோடு நிறுத்திட்டு செட்டில் ஆகலாமுன்னு நினைக்கும் போது இவங்களுக்கு திருட்டு வேலை கொடுத்த பாஸ் மதுரையில் இருக்கும் தாதா பாண்டியன் என்பவரிடம் உள்ள பத்து ஃபாரீன் கார்களை தூக்கி வரச் சொல்லி லம்பாக ஒரு அடவான்ஸை நீட்டுகிறார்..

சில விநாடிகள் யோசனைக்கு பிறகு ஒப்புக் கொண்டு மதுரை போய் நோட்டமிட்டாகிறார்கள், கையில் உள்ள பணத்தை வைத்து படு ஸ்டைலிஸாக பல உள்விவகாரங்களில் நுழைந்த நட்டிக்கு தாங்கள் சென்னை கம்பெனியில் வேலை பார்த்தபோது கார் திருடு போன வழக்கில் சிக்க காரணமே இந்த பாண்டியன்தான் என தெரியவருகிறது. திருடு போன அந்த காரும் பாண்டியனிடம் தான் இருக்கிறது..

இந்நிலையில் வழக்கம் போல் பக்காவாக் ஸ்கெட்ச் போட்டு பாண்டியனிடம் இருந்த பத்து ஃபாரீன் கார்களையும் லவட்டும் நட்டி, ஒரே ஒரு காரை மட்டும் காரணமாக விட்டு வைத்து விட்டு அந்த காரையும் மூன்று நாளில் தூக்குவதாக தாதா பாண்டியனுக்கு ஓப்பன் சவால் விடுகிறார்.. உடனே காருக்கு பாதுகாப்பாக ஆட்களை காவல் போடுகிறார் தாதா பாண்டியன். அதையும் மீறி அந்த காரை நட்டி எப்படி தூக்கினார்..? பாண்டியனை ப்ழி வாங்கியது எப்படி என்பதெல்லாம் அடிசினல் கதை. முன்னரே சொன்னது போல் தமிழ் சினிமாவுக்கு செம விறுவிறுப்பான கதை..ஆனால் அதை முழுமையாக பயன்படுத்தாமல் ஏதேதோ ட்ராக்கில் போல் சலிப்படைய செய்து விட்டார்கள். ஆனாலும் நட்டியின் வழக்கமான (சூ.ஸா- தனமான) ஸ்பீடான வசனமும், ஸ்டைலும் நடிப்பும் சதுரங்க வேட்டை அளவுக்கு இல்லா விட்டாலும் படம் போரடிக்காமல் செல்கிறது.. கார்களை நவீன தொழில்நுட்பத்துடன் கடத்தும் விதம் பிரமிப்பூட்டினாலும் காதில் பூ சுற்றும் ரேஞ்சில் இருப்பதையும் ஆடியன்ஸ் கமெட்ஸ் மூலம் தெரிய வருகிறது. அதே சமயம் காதல், மரம் சுற்றல் போன்ற காட்சிகளை அவாய்ட் செய்து ஆண் பெண் நட்பை படு யதார்த்தமாக காட்டியிருப்பது புதுசு மற்றும் சிறப்பு…

ஹீரோயினாக நடித்திருக்கும் ரூஹி சிங்கிற்கு அதிகளவில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். அர்ஜுனன், முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். சரத் லோகித்ஸ்வா, மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார்.

கார் கடத்தலை மையமாக வைத்து, அதில் ஒரு பழிவாங்கல் கதையையும் இடையில் செருகி ரசிகர்களுக்கு போரடிக்காமல் கொண்டு போன கதையை கிளைமாக்சில் படு ராவலாக முடித்து உதட்டை பித்துகியபடி வெளியேற வைத்து விட்டார் அறிமுக இயக்குனர் தாஜ். இன்னும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!