புதைக்கபடும் உடல் ஆராய்ச்சிக்கான ஸ்பெஷல் பண்ணை!

புதைக்கபடும் உடல் ஆராய்ச்சிக்கான ஸ்பெஷல் பண்ணை!

நவீனமயமாகி விட்ட தற்போதைய நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் போன்ற காரணங்களால் தான், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு வருவதாக இப்போது பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு இதய நோய் உண்டு என, ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. அதுவும் எப்படிப்பட்ட ஆராய்ச்சி தெரியுமா? எகிப்து நாட்டில் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த, “மம்மிஸ்’ என அழைக்கப்படும் இறந்தவர்கள் உடலை ஸ்கேன் செய்து பார்த்து, கண்டுபிடித்துள்ளனர்.

body farm may 14

ஆனால் இது போம்ற ஆராய்ச்சிகளுக்கு இறந்த உடல் கிடைப்பது இன்றளவும் அரிதான விஷயமாக்வே இருக்கிறது. இந்நிலையில்
அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் தாம்பா நகரம் அருகே உடல் பண்ணை திறக்கப்பட்டவுள்ளது. புதைக்கப்பட்ட சடலங்கள் எப்படி உருமாறி மக்கிப்போகின்றன என்பதை அறிவியல் பூர்வமாக கண்டறிய இந்த பண்ணை அடுத்த வாரம் அமைக்கப்படவுள்ளது.

வடக்கு தாம்பாவில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆடம் கென்னடி ஆய்வுமையத்தில் இன்று அதிகாரிகளால் குழிகள் தோண்டப்பட்டன. இந்த இடம் உடல் ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய தலைமை மையமாக எதிர்காலத்தில் அமையும் என்று தடய நிபுணர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் நம்பப்படுகிறது.

சடலங்கள் மண்ணில் புதைக்கப்பட்டதும், அவை எவ்வாறு சிதிலமைடைகிறது என்றும் அதற்கு எந்த வகையில் சுற்றுச்சூழல், வானிலை மற்றும் பிற காரணிகள் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றது என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் இந்த பண்ணையை நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

வரும் நாட்களில், 4 சடலங்கள் அங்கு புதைக்கப்படவுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தெற்கு புளோரிடா பல்கலைகழகத்தின் பேராசிரியர்கள் அந்த சடலங்களை தோண்டி எடுத்து, ஆராய்ச்சி நடத்தவுள்ளனர்.

error: Content is protected !!