October 22, 2021

ஒரே தேசம் : ஒரே தேர்தல் – பாஜக மீண்டும் வலியுறுத்தல்!

இந்தியா முழுவதும் பார்லிமெண்ட் தேர்தலையும், எல்லா மாநில சட்டபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் பற்றி தொடர் விவாதம் நடந்தபடி உள்ளது. இத்திட்டத்தின்படி முதல் கட்டமாக, 2021 வரை நடக்க வேண்டிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தலை 2019 லோக்சபா தேர்தலுடன் நடத்த ஆலோசிக்கப்படுகிறது. அதன்பின் நடக்க வேண்டிய சட்டசபை தேர்தல்களை 2024 லோக்சபா தேர்தலுடன் நடத்த திட்டமிடப்படுகிறது. இது நடை  முறைப்  படுத்தப்பட்டால் 2024 முதல் லோக்சபா தேர்தலும் அனைத்து மாநில சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடப்பது உறுதி செய்யப்படும். இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து   உள்ள  நிலையில் பார்லிமெண்ட் மற்றும், சட்டசபைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவிப்பதாக சட்ட ஆணையத்திடம் பா.ஜ.க தெரிவித்துள்ளது.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக 1952-ம் ஆண்டுதான் எல்லோ ரும் சமம் என்ற அடிப்படையில் ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. அதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது எல்லோ ருக்கும் ஓட்டுரிமை கிடையாது. பணக்காரர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், நில வரி, வீட்டு வரி செலுத்துகிறவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், ஓட்டுப்போடவும் முடியும்.

அப்போது வேட்பாளர்களின் பெயர்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற பல வண்ணங்களில் பெட்டி கள் வைக்கப்பட்டு இருக்கும். எனவே வேட்பாளரின் பெயரை சொல்லி ஓட்டு கேட்காமல், பெட்டி களின் நிறத்தை சொல்லித்தான் வாக்கு சேகரிப்பார்கள். அதன்பிறகு கால மாற்றத்துக்கு ஏற்ப தேர்தல் முறையிலும் மாற்றம் வந்தது.

நாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபை களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உருவான அரசியல் சூழ்நிலைகள், மாநில சட்டசபைகள் கலைப்பு, கவிழ்வது போன்ற காரணங்களால் நாடாளு மன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் இரண்டுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுகிறது. எப்போதாவது சில சந்தர்ப்பங் களில் சூழ்நிலைகள் சாதகமாக அமையும் போது சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதில் உள்ள ஒரு பாதகமான அம்சம் எது என்றால் அதிக செலவு. அதாவது இரண்டுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் அரசாங்கத்துக்கு அதிக செலவு ஆகிறது.

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தி முடிப்பதே ஒரு சாதனை ஆகும். நாடாளுமன்றத்துக்கு இதுவரை 16 பொதுத்தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதேபோல் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப் படு கிறது. இதற்கிடையே, மாநில அரசு கவிழ்ந்தாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது.

முதன் முதலாக 1952-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ஆன செலவு வெறும் ரூ.10½ கோடி. அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 2004-ம் ஆண்டு தேர்தல் நடத்த ரூ.1,300 கோடி செலவானது. அதன்பிறகு நடைபெற்ற இரு தேர்தல்களிலும் தொடர்ந்து செலவு அதிகரிக்கவே செய்தது. இதுதவிர அவ்வப்போது மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த எக்கச்சக்கமாக செலவாகிறது.

இப்படியாக ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தும் போதும் அரசு கஜானாவில் உள்ள பணம் கோடிக் கணக்கில் செலவு ஆவதால், மத்திய அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படுகிறது. குறிப்பாக தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்வது, பாதுகாப்பு படைகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பி வைப்பது, பார்வையாளர்களை நியமித்து கண்காணிப்பது போன்றவற்றுக்கு அதிக செலவு ஏற்படுகிறது.

எனவே நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வாக்குப்பதிவை நடத்தினால் தேர்தல் செலவை பெருமளவில் குறைக்கமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது கூட்டாட்சி தத்து வத்துக்கு எதிரானது.. பா.ஜ.க. எதேச்சதிகார உணர்வுடன் இதை செயல்படுத்துவதாக காங். குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன் அ.தி.மு.க., தி.மு.க., மா.கம்யூ., இந்திய கம்யூ., பார்வர்டு பிளாக், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்., மதச்சார்பற்ற ஜனதாதளம், தெலுங்குதேசம், கோவா முன்னேற்ற கட்சி, ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் அ.தி.மு.க.மட்டும் தனது நிலைப் பாட்டை மாற்றி கூறிஉள்ளது. 2021ல் தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கிற வரை இதை அமல் படுத்தக் கூடாது என்று கூறிய அ.தி.மு.க., ஒரே சமய தேர்தலோ கூடாது என்று வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் இது பற்றி சட்ட ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா நாடாளுமன்ற மாநிலங்க ளவை  உறுப்பினர்கள் விஜய் சஹஸ்ரபுத்தே, பூபேந்தர் யாதவ், அனில் பலுனி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் சட்ட ஆணைய தலைவர் பி.எஸ்.சவுகானை நேற்று சந்தித்து நாடு முழு வதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

பின்னர் பூபேந்தர் யாதவ் எம்.பி. கூறும்போது, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற எங்கள் கட்சியின் கருத்தை சட்ட ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். 2014 பொதுத்தேர்தலில் மிகப்பெரிய தொகை யாக ரூ.4 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே தேர்தல் மூலம் கணிசமான அளவுக்கு தேர்தல் செலவை குறைக்கலாம். அதேபோல மீண்டும், மீண்டும் தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவது தவிர்க்கப்படும்” என்றார்.

மேலும் இது குறித்து பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சட்ட ஆணையத்துக்கு 8 பக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர், “நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கொள்கை முடிவு. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அதே போல ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்று வருவதும் தவிர்க்கப்படும். இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்பது ஆதாரமற்ற வாதம். மாறாக இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும். இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்