மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்!

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்!

மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல. கணேசன் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பாஜக தேசியக் குழு உறுப்பினராக இருக்கிறார். தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாரதீய ஜனதாவின் முன்னாள் தலைவரான இல. கணேசனுக்கு, மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.கவர்னராக நியமனம் செய்யப்பட்டது குறித்து இல.கணேசன் கூறுகையில், எனது சேவை அங்கீகரிக்கப்பட்டது குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில், எந்த இடத்திலும் பணிபுரிவதற்கு தயாராக உள்ளேன்.எனது அனுபவம் மூலம், ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்றே. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றி தொடர்ந்து பா.ஜ., தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ., தலைவர், ராஜ்யசபா எம்.பி.,என பதவி வகித்தவர் இல.கணேசன்.  தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் இலக்குமிராகவன் – அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டு விட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார். இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்

முன்னதாக, தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு பாரதீய ஜனதாவுக்கு தலைவராக வந்த எல்.முருகனுக்கு அண்மையில் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!