கோவா-வைத் தொடர்ந்து மணிப்பூரிலும் பாஜக ஆட்சி!

கோவா-வைத் தொடர்ந்து மணிப்பூரிலும் பாஜக ஆட்சி!

நடந்து ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும் ஆட்சி அமைக்க முயன்றது. கோவாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மனோகர் பாரிக்கர் நாளை முதல்வராக பதவியேற்கிறார்.

manipur mar 13

இந்த நிலையில், மணிப்பூரிலும் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா பெரும்பான்மை பெற்றதாக தெரிகிறது. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 28, பா.ஜ.க. 21, பிற கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றன. அங்கு ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. இந்த எண்ணிக்கை பெற காங்கிரஸ் முயன்றது.

ஆனால், தலா 4 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஓரிடத்தில் வெற்றி பெற்ற லோக் ஜன சக்தி ஆகியவை பா.ஜ.க.வை ஆதரித்தன. இதனால் பா.ஜ.க.வுக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தது. மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு காங்கிரசுக்கு தேவைப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சியாம்குமார் சிங் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்தார். இதனால் பா.ஜ.க.வின் பலம் 31 ஆக உயர்ந்தது.இதையடுத்து மணிப்பூரில் இன்று ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை பா.ஜ.க. தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.அதை கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா ஏற்றுக் கொண்டார். பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அவர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே , மணிப்பூரில் புதிய அரசு பொறுப்பேற்கும் வகையில் முதல்வர் ஒக்ராம் இபோபியை ராஜினாமா செய்யுமாறு அம்மாநில கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை பெற்றும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் போய் விட்டது.

Related Posts

error: Content is protected !!