தமிழகத்தில் பாஜகவின் ரீ எண்ட்ரீ பிரயோஜனப்படுமா?
எம்ஜிஆர் வாரிசாக களமிறங்கி 1992ல் முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை கைப் பற்றிய ஜெயலலிதா 1998ம் வருஷ தேர்தலில் படு தோல்வி அடைஞ்சிட்டார். இதனையடுத்து 1998 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய வியூகத்தை அமைத்த அவர், யாரும் எதிர்பாராத விதமாக பாஜக, பாமக, மதிமுகவுடன் ஒரு புதிய கூட்டணியை அறிவித்தார். இந்த ஜெ.வின் புது அணி தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டது. அதே சமயம் பாஜகவுக்கு அந்த கூட்டணி ரொமப் பலமால அமைந்தது. குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி என்ற ஜெயலலிதாவின் அந்த முடிவுதான் 1998 தேர்தலில் 20-க்கும் அதிகமான சிறிய கட்சிகளை இணைத்து வாஜ்பாய் ஆட்சி அமைக்க வழிவகுத்தது. பின்னர் 13 மாதங்களில்அதே வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தார் அதே ஜெயலலிதா என்பது தனித் தகவல்.
இதை பாஜக – திமுக கூட்டணி ஏற்பட்டு பாஜக நிலையான ஆட்சியை கொடுத்து. கொள்கை அளவில் பாஜகவும் திமுகவும் நேரெதிர். ஆனால், அதிமுகவும் பாஜகவும் ஜெயலலிதாவின் சித்தாந்தங்களும் அப்படி அல்ல. உதாரணத்திற்கு 2001 – 2004 வரை அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில்தான் பலரும் கொண்டு வர தயங்கிய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவந்தார். அதேபோல குஜராத் கலவரத்துக்கு பின்பு பலத்த சர்ச்சைக்கு பின்பு நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்றார். இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம். பெரும் பான்மை யினருக்கு ஆதரவாகவே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தில்தான் மத்திய பாஜக அரசில் திமுக அங்கம்வகித்ததுதான் அரசியல் முரண்.
2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுக காங்கிரஸூடன் இணைந்தது. இதனையடுத்து பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சுதாரித்துக்கொண்ட ஜெயலலிதா, மதமாற்ற தடை சட்டம் உள்பட பலதை திரும்பப்பெற்றார். மேலும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை கைது செய்தார். இது இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவிடம் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. இதனால் பாஜக – அதிமுக உறவுக்கு இடையே விரிசல் விழுந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கோபத்துக்கும் ஆளானார். இதன் பின்பு 2009 இல் பாஜகவின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானி, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் ஆனால் அது பலனளிக்கவில்லை.
2014 தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்து சந்தித்துவிட்டு சென்றார். ஆனாலும், 39 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கினார் ஜெயலலிதா. அதில் 37 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் கூட “மோடியா இந்த லேடியா” என கேட்டார் ஜெயலலிதா. தமிழகத்தில் “லேடி”தான் என்ன மக்கள் முடிவு செய்தனர்.
ஆனால் அப்போது அதிமுகவின் முகமாக இருந்த ஜெயலலிதா இப்போது இல்லை. அதே சமயம் பாஜகவுக்கு தமிழகத்தில் அழுத்த மாக கால்பதிக்க வேண்டும் என்ற நிலை. தமிழகத்தில் பாஜக வுக்கு இருக்கும் ஒரே நட்புள்ள கட்சி அதிமுக. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தும் உடல் நலன் குன்றி இருக்கிறார். பாமகவுடன் எப்போதும் இழுபறி இருக்கும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். இப்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையை பாஜக ஓரளவுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ள தாகவே கருத வேண்டும்.
ஆனால், எத்தனை இடங்களில் வெற்றி வாகை சூடும் என்பதை கணிக்கவே முடியாது. இன்னும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை எனவே காட்சிகள் மாறலாம், அரசியல் திரைப்படங் களின் காட்சிகள் எப்போது யாரால் “எடிட்” செய்யப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அகஸ்தீஸ்வரன்