September 29, 2021

பாஜக கெலிச்சிடுச்சு : ஆனா நோட்டாவுக்கும் குறைச்சலா ஓட்டு வாங்குன தொகுதிகளும் எக்கச்சக்கம்!

பலவித சர்ச்சைகளுக்கிடையே நடந்து முடிந்த 17வது பார்லிமெண்ட் தேர்தலில், பாஜக 303 தொகுதி களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற் பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சி யை அமைக்கிறது. இதற்கான பதவி ஏற்பு விழா வரும் 30ம் தேதி மாலை 5 மணி அளவில் நடை பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய 16வது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் 3ம் தேதி வரை உள்ளதால், அதற்கு முன்பாக, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். முன்னதாக பாஜக மூத்த தலைவர் அத்வானியை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பாஜக தலைவர் அமித் ஷா உடன் சென்ற மோடி, அத்வானி யிடம் வாழ்த்து பெற்றார். இதேபோல், கடந்த காலங்களில் அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் இம்முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அமித் ஷாவும், அத்வானியிடம் வாழ்த்து பெற்றார்.

இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ள பாஜகவுக்கு, உத்தரப் பிரதேச மாநிலம் மிகப்பெரிய அளவில் மீண்டும் கை கொடுத்துள்ளது. மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவரும் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைத்த போதிலும், பாஜக 60க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி யிருக்கிறது. ஆனாலும், ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாஜக 1 தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக போட்டியிட்ட 24 தொகுதிகளில், 18 தொகுதிகளில் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவான பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவீதத்தை குறிப்பிடுகையில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது, அதிக பட்சமாக அரக்கு தொகுதியில் 17,867 வாக்குகளை பாஜகவும், 47,977 வாக்குகளை நோட்டாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக, நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் வாங்கிய தொகுதிகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் விவரம்:

ஆந்திர பிரதேசம்

1.அமலாபுரம்

பாஜக- 11516 (0.94%)

நோட்டா -16,449 (1.34%)

2.அனக்காபள்ளி

பாஜக- 13276 (1.07%)

நோட்டா- 34,897 (2.82%)

3.அனந்தபூர்

பாஜக-7604 (0.57%)

நோட்டா – 16,466 (1.23%)

4.அரக்கு

பாஜக-17,867 (1.66%)

நோட்டா- 47,977 ( 4.46%)

5.பாபட்லா

பாஜக- 10,351 (0.82%)

நோட்டா- 13,218 (1.04%)

6.சித்தூர்

பாஜக- 10,496 (0.8%)

நோட்டா- 20,556 (1.56%)

7.எலுரு

பாஜக – 8,412 ( 0.63%)

நோட்டா – 23,880 (1.8%)

8.ஹீண்டுபூர்

பாஜக – 13,805 (1.03%)

நோட்டா – 17,428 (1.3%)

9.கடப்பா

பாஜக- 4,085 ( 0.33%)

நோட்டா – 14,692(1.2%)

10.காக்கிநாடா

பாஜக- 9,596 ( 0.78)

நோட்டா- 17,153 (1.3)

11.மச்சிலிபட்டணம்

பாஜக- 6,462 (0.52%)

நோட்டா- 14,077 (1.13%)

12.நந்யாள்

பிஜேபி- 9,066 (0.7%)

நோட்டா – 9,791 (0.75%)

13.நெல்லூர்

பாஜக- 12,513 (0.93%)

நோட்டா- 17,161 (1.33%)

14.ஒங்கோலெ

பாஜக- 8,229 (0.61)

நோட்டா- 20,865(1.55)

15.ராஜமுந்திரி

பாஜக- 12,334 (0.99)

நோட்டா- 18,087 (1.45)

16.ஸ்ரீகாக்குளம்

பாஜக- 8,390 (0.72)

நோட்டா- 25,545 (2.21)

17.திருப்பதி

பாஜக- 16125 (1.23)

நோட்டா- 25781 (1.96)

18.விழியநகரம்

பாஜக- 7,266 (0.6)

நோட்டா- 29,501 (2.42)