June 21, 2021

பில்கேட்ஸ் தன் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கவே இல்லையாம்! ஏன் தெரியுமா?

இன்றைய குழந்தைகளில் நிஜமான மொபைல் போன் பயன்படுத்தா சில்ரன்ஸ் யாருமே கிடையாது. பெற்றோர்களும் அதனை ஊக்குவிக்கும் விதத்தில் லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கிக் கொடுப்பது பேஷனாகி விட்டது. ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும், பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்தித்துள்ளது என்றும் பல மணி நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு, தசைகள் பாதிப்படைகின்றன. மன நிம்மதி, தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பையும் தருகிறது என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

jpg

மேலும் சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ, கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி பெறுவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போய் விடுகிறார்கள் என்றும் வார்னிங் கொடுத்துள்ளது

அத்துடன் குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலையும்போது உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும், உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விடுகிறது. கூடவே ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. பொதுவாக பெற்றோர்களும், மற்றோர்களும் பேசிப்பேசிதான் குழந்தைகளின் பேச்சுத்திறனும், மூளைத்திறனும் வளர்ச்சி பெறுகின்றன. கருவிகளின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக ஆக்கிவிடுகின்றன.

இப்படி மொபைல்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ, பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே தனது பிள்ளைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தவே கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் பில்கேட்ஸ்.

billgates apr 23a

இது குறித்து அவர் கூறுகையில், “எலக்டரானிக் பொருள்களில் இருந்து வெளியாகும் நீல ஒளியால் தூக்கம் கெடுகிறது. சில நிறுவனங்கள்ஸ்லீப்பிங் மோட் வசதியை வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் மாலையில் தான் நீல நிற ஒளி தெரியும். எனவே தான் எங்களது டின்னர் டேபிளில் ஸ்மார்ட்போன்களை அனுமதிப்பதில்லை. எனது குழந்தைகளான ஜெனிபர் (20), ரோரி (17), போபி (14) ஆகியோருக்கு 14 வயதுவரை ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்கவே இல்லை. எங்கள் நண்பர்களிடம் எல்லாம் ஸ்மார்ட்போன் இருக்கிறதே… நாங்கள் மட்டும் பயன்படுத்தக்கூடாதா… என்று குற்றம் சாட்டுவார்கள். இருந்தாலும் அவர்களை நான் அனுமதிக்கவே இல்லை. இப்போது கூட சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதி தந்துள்ளேன். இதனால் அவர்களுக்கு இரவில் நல்ல தூக்கம் கிடைக்கிறது”என்றார்.