April 14, 2021

பீகார் :முதல் அமைச்சராக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்!

பீகார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் ஞாயிற்றுக் கிழமையன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பீகார் முதல்வராக 7-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாகவும் நிதிஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளராம்.

அண்மையில் பாட்னா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடந்து முடிந்த பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது அதன் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஒரு ஒன்றுபட்ட கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இக்கூட்டத்தில் மேலிடப் பார்வையாளராக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு ராஜ்நாத்சிங் வரும் பொழுது அவரை நிதிஷ்குமார் கைகூப்பி வரவேற்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்க நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை இனி பீகார் மாநில ஆளுநர் பசுவுக்கு மாநில தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

அந்த தேர்வினை ஆளுநர் அங்கீகரித்தது ம் பதவி ஏற்பு விழாவிற்கான நாள் நேரம் ஆகியவற்றை ஆளுநரும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதிஷ்குமாரும் முடிவு செய்து அறிவிப்பார்கள்.

ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றிய நிதிஷ்குமார் இந்தமுறை நான்காவது முறையாக மாநில முதல்வராக பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.