November 30, 2022

பிக்பாஸ் – எவனுக்கும் இங்கே வெட்கமில்லை..!

பிக்பாஸில் இருப்பவர்கள் பணம், புகழுக்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்பது தெளிவுதான். விட்டால் இப்போது சாக்கடை தண்ணீரை குடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் சொன்னால்கூட குடிப்பார்கள் போலிருக்கிறது. அவ்வளவு கேவலமாக இருக்கிறது அவர்களது நடவடிக்கைளும், பிக்பாஸ் நடத்தும் போட்டிகளும்.

நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பெயரில் ஒரு டாஸ்க்கை நடத்துகிறார் அந்த மயிராண்டி பிக்பாஸ். உடல் அளவில் ஆணும், பெண்ணும் சமமே அல்ல. இது உலகமறிந்த விஷயம். “உள்ளேயிருக்கும் 19 பேரும் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பொம்மையை உள்ளே கொண்டு போய் வைத்தால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள்” என்கிறான் பிக்பாஸ்.

இந்தக் கூறு கெட்ட குப்பைகளும் அவன் சொன்னான் என்பதற்காக எதைப் பற்றியும் சிந்திக்காமல் அவன் சொன்னதை அப்படியே செய்கிறார்கள். இன்றைக்கு அஸீம், ஷெரீனாவிடமிருந்த பொம்மையை பிடுங்குவதற்காக அவரது பக்கத்தில் அமர்ந்து தனது இடது கையை ஷெரீனாவின் இடுப்பில் குறுக்காகப் பிடித்துக் கொண்டு அவரை எழவிடாமல் பார்த்துக் கொண்டான். பிரச்சினை பெரிதாக ஷெரீனாவை மூச்சுமுட்டும் அளவுக்கு மொத்தக் கூட்டமும் நெருக்கித் தள்ளியது.

இப்படியொரு இளம் பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொள்ளும் இதே கும்பல்தான், வெளியில் வந்து யோக்கிய மயிரைக் காட்டுவார்கள். இவர்கள் வீட்டுப் பெண்ணை யாராவது இப்படி செய்தால் சும்மா இருப்பானுங்களா..? எந்தப் பெண்ணையாவது யாராவது கையைப் பிடித்திழுத்து தகராறு செய்தால் யோக்கிய சீலர்களாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் தீர்ப்பெழுதுவார்கள் இந்த விளக்கெண்ணெய்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் இவர்கள் செய்தால் மட்டும் இது விளையாட்டாம்..! வெட்கங்கெட்டவய்ங்க.

சரி.. அந்தப் பொண்ணுக்காச்சும் அறிவு வேண்டாமா.. என்ன செய்யறது… இந்தப் புகழ் இல்லைன்னா வெளில வாழ முடியாது.. சுடுகாட்ல இடம் கிடைக்காது பாருங்க.. என்ன செய்தாவது பணத்தையும், புகழையும் சம்பாதியுங்கள் என்று ஒரு தலைமுறையையே பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ! விஜய் டிவி டாப் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பொண்ணுகளை இந்தப் போட்டிக்கு அனுப்புவானுகளா..? செய்ய மாட்டானுங்க. கேட்டா “எங்க பிள்ளைக பணத்துக்கும், புகழுக்கும் அலையாதுக”ன்னு சொல்வானுங்க.

ஆனா, உள்ள இருக்குற இந்த மரமண்டைகளுக்கு இது உரைக்கணுமே.. வெளில வந்து என்னாமா பீலா வுடுவானுங்க பாருங்க. இதுல ஒரு ஜன்மம் இன்னொரு பொண்ணோட தோளை ரெண்டு தடவை கடிச்சுகூட வைக்குறான். அந்தப் பொண்ணு எதிர்ப்புக் காட்டாம சிரிக்குது… வெட்கங்கெட்டதுக..! இதையெல்லாம் நடுவீட்ல குடும்பத்தோடு உக்காந்து பார்க்குற நம்மளோட அடுத்தத் தலைமுறையை நினைச்சாத்தான் நமக்கு பகீருங்குது..!

ஏன்னா விஜய் டிவியோட ஒரிஜினல் ஓனர் வெளிநாட்டுக்காரன். அதிகாரிகள் பூராம் மலையாளிகள்.. கெட்டுக் குட்டிச் சுவராப் போகப் போறது தமிழனுங்கதான்..!

நாசமாப் போங்கடா..!!!

சரவணன் சவடமுத்து