பீடி குடித்தே வருஷந்தோறும் 6 லட்சம் இந்தியர்கள் பலி!

பீடி குடித்தே வருஷந்தோறும் 6 லட்சம் இந்தியர்கள் பலி!

சார்க் நாடுகளின் சார்பில் நம் சொந்த செலவில் சாட்டிலைட் அனுப்பியுள்ள நம் நாட்டில் புகையிலை உற்பத்தி என்பது இன்னும் சட்டரீதியாக தடை செய்யப்படவில்லை. அதிலும் புகையிலை என்பது பணப்பயிராகவே பாட புத்தகங்களில் இடம் பெற்று வருகிறது. நாடு முழுக்க 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புகையிலை பயிராகிறது. நம் தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரம் ஹெக்டேரில் புகையிலை பயிர் செய்யப்படுகிறது. ஆக நமது நாட்டின் வருடாந்திர புகையிலை உற்பத்தி 700 மில்லியன் கிலோ ஆகும்.

beedi may 6

அதிலும் தமிழ்நாட்டில் 35 மில்லியன் கிலோ புகையிலையை ஆண்டுதோறும் உற்பத்தி செய்கிறது. சீனா, பிரேசிலுக்கு பிறகு இந்தியா புகையிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய நாடாக இடம் பெறுகிறது. இந்த புகையிலையால் ஆண்டுக்கு ரூ.2000 கோடி அன்னியச் செலாவணியாகவும், ரூ.10 ஆயிரம் கோடி கலால் வருவாயாகவும் கிடைக்கிறது. புகையிலையினால் 3 கோடியே 60 லட்சம் பேர்வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 60 லட்சம் விவசாயிகள் புகையிலை பயிரிடுகிறார்கள். இந்தியாவில் 4.4 கோடி பேர் பீடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பீடி தொழில் தொடர்பான பணிகளில் 40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாட்டிலேயே பீடி தொழிலாளர் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. உலக பீடி உற்பத்தியில் 85 சதவீதம் இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 80 கோடி பீடிகள் விற்பனையாகின்றன. இது போன்ற பெருமைகளெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்தியாவில் பீடிப் பழக்கத்தால் சுவாசப்பை கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் புகையிலை தொடர்பான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்களில் எண்ணிக்கையில் பீடி புகைப்பவர்கள் 9.2 சதவீதமாகவும், சிகரெட் பிடிப்பவர்கள் 5.7 சதவீதமாகவும் உள்ளனர். முன்னரே குறிப்பிட்டது போல் நாட்டின் புகையிலை பயன்பாட்டில் 70 முதல் 80 சதவீதம் பீடிகளை தயாரிக்க

ஆனால் புகையிலை சார்ந்த பொருட்களின் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில் பீடிப் பழக்கத்தால் மட்டும் சுவாசப்பை கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!