September 28, 2022

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிதானத்தை இழந்தார்! – வீடியோ

மெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிதானத்தை இழந்து செய்தியாளரை திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோ பிடன் செய்தியாளரை திட்டும் வகையில் (“Stupid son of a Bitch” – என்று) முணுமுணுத்தார். எனினும் அவரது பேச்சு அங்கிருந்த மைக்ரோபோனிலும், காணொலியிலும் பதிவானதால் கூடியிருந்த சக செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பத்திரிகையாளரை ஜோ பிடன் திட்டிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ஜோ பிடனின் இந்த செயல் மக்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பைக் குறைக்கும் விதமாக மாறியுள்ளது.

ஏற்கெனவே கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதும், மிக அருமையான கேள்விகளை கேட்பதாக டூசியை பாராட்டுவதுபோல அதிபர் ஜோ பிடன் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அதிபர் ஜோ பைடன் தரப்பினர், முறையான தரவுகள் இல்லாமல் கேள்வி கேட்டதால், அவ்வாறு குறிப்பிட்டார் என தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நடந்த ஒரு மணிநேரத்துக்குள்ளாக, அதிபர் ஜோ பிடன் அந்த செய்தியாளரை அழைத்து `தனிப்பட்ட முறையில் உங்களை குறிப்பிட்டு பேசவில்லை’ என கூறியுள்ளார்.