குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் : -சிறு குறிப்புகள்!

குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் : -சிறு குறிப்புகள்!

குஜராத் காந்திநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களான நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹ்லாத் ஜோஷி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தருண் சக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரும், பாஜகவின் குஜராத் பொறுப்பாளருமான நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ”கடலோடியா தொகுதியின் எம்எல்ஏ பூபேந்திர படேல் பாஜக சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.” என்று அறிவித்தார்.

குஜராத்தின் புதிய முதல்வர் குறித்த சிறு குறிப்புகள்:

அகமதாபாத் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கட்டட பொறியியலில் பட்டய படிப்பு முடித்துள்ள பூபேந்திர படேல் இதுநாள் வரை ஒரு அமைச்சராக கூட இருந்தது கிடையாது. அதே சமயம் உத்தரப் பிரதேச கவர்னரும் குஜராத் முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேலுக்கு நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார்., கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் படேலை விட 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார்.அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராகவும் அம்தவாட் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராகவும் பூபேந்திர படேல் பதவி வகித்துள்ளார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், படேல் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சமூகத்தை திருப்தி அடையும் நோக்கில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.பூபேந்திர படேல் குஜராத்தில் 17-வது முதல் மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.

பழைய அமைச்சர்களில் 50 சதவீதத்துக்கு மேல் இந்த முறை அமைச்சரவையில் இருக்கமாட்டார்கள். முதலமைச்சருடன் அமைச்சர்களும் திங்கள் கிழமை பதவி ஏற்பார்கள் மாநில பாஜக தலைவர்கள் கூறினார்கள்.

error: Content is protected !!