பூமி- சினிமா விமர்சனம்!

பூமி- சினிமா விமர்சனம்!

அமெரிக்காவின் 18 அரசுத்துறைகளில் சிறப்பான பணியிடமாக கருதப்படுவது நாசா மட்டுமே. அமெரிக்க அரசுத் துறையில் நாசா சிறந்த பணியிடமாக 78.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆனால், சாவில் பணிக்கு விண்ணப்பிக்கவே ஒரு தகுதி வேண்டும். குறைந்தது ஆயிரம் மணி நேரம் விமானம் ஓட்டியிருந்தால்தான் விண்ணப்பிக்கவே முடியும். தலைமைப் பண்பு, தகவல் தொடர்பு, குழுவுடன் இணைந்து பணியாற்றுதல் முக்கியத் தகுதிகளாக கருதப் படும்.  அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடக்கும். தொடர்ந்து கடினமான உடற்தகுதித் தேர்வும் நடைபெறும். இதில் தேர்வு பெறுவதும் முக்கியமானது. உயரம் 5’2 ல் இருந்து 6’3 அடிக்குள் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் இருக்கவே கூடாது. அமர்ந்த நிலையில் ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். உடற்தகுதித்திறனையடுத்து தகுதித்திறன் தேர்வும் நடத்தப்படும். விண்வெளி பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.42 லட்சம் முதல் ரூ. 92 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி, திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இப்படியாப்பட்ட நாசாவில் பணி புரியும் நாயகன்  நாசா வேலையை தூக்கி எறிந்து விட்டு தன் தாய் பூமிக்காக போராடும் கதைதான் ஜெயம் ரவி நடித்து வெளி வந்துள்ள சில்வர் ஜூபிளி படம். அதிலும் தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் 55வது நாட்களாக தொடர் போராட்டம் நடத்தும் விவசாயிகள், கார்பரேட் போக்கையும் போன ஆண்டே சுட்டிக் காட்ட தயாரான கதைதான் இந்த பூமி.

அதாவது நம்மூரை (அதாங்க- திருநோலியை)ச் பூமிநாதன் (ஜெய ஒரு இளம் விஞ்ஞானி. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழமுடியாது என்று எல்லா விஞ்ஞானிகளும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பூமிநாதன் மட்டும் அங்கே மனிதர்கள் வாழமுடியும் என்று சொல்லி விளக்கும் சூழலும் ரிலாக்ஸ் செய்ய சொந்த ஊர் வருகிறார், இங்கே நீரின்றி வாடிய பயிர்களையும், அதை ஒட்டி போராட்டமெல்லாம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமைச்சரையே எதிர்த்து களம் இறங்கிறார். இதை எதிர்பார்க்காத ஒரு கார்பரேட் கம்பெனியின் முதலாளி, ஒரு மினிஸ்டர் ஆகிய இருவரும் பகையாளி ஆகிறார்கள். அவர்களின் தொடர் தாக்குதலை பூமிநாதன் எப்படி முறியடித்து மக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்துகிறார் என்பதே முழுக் கதை .

பூமிநாதனாக வரும் ஜெயம் ரவி-க்கு நடிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை விட வசனத்தை பக்கம் பக்கமாக ஒப்பிப்பதற்கே சான்ஸ் அதிகம் கிடைத்துள்ளது. அதையும் அவர் தேமே என்று செய்து விட்டு போகிறார். நாயகி நிதி அகர்வால் கவர்கிறார் என்றாலும் நடிப்பதற்கு சான்சே கொடுக்கவில்லை. கார்பரேட் கம்பெனியின் முதலாளியாக ரோனித்ராய் & இன்னொரு வில்லனாக, மனசாட்சியே இல்லாமல் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்யும் அமைச்சர் வேடத்தில் ராதாரவி. இருவரும் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

தம்பிராமய்யாவுக்கு உருக்கமான வேடம். கூடவே சதீஷ். ஜெயம் ரவியின் தாயாக சரண்யா, கலெக்டராக ஜான் விஜய், விவசாயிகளில் முக்கிய ரோலில் செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.

டட்லியின் ஒளிப்பதிவும், டி.இமான் இசையும் பாச் மார்க் வாங்கி விட்டன.

லட்சுமன் டைரக்டு செய்து இருக்கிறார். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகளின் போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார். ஆனால் படம் ஓடும் போது வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் தன் வாட்ஸ் அப், பேஸ்புக், டெலிகிராம் போன்ற சோசியல் மீடியாக்களிலும், விக்கிபீடியாவின் பினாமி என்றழைக்கப்படும் மதன் கவுரி யூடியூப் வீடியோக்களையும் காண்பித்து நோகடித்து விட்டார். இவ்வளவு சீரியசான படத்தில் ஒரு காட்சியில் கூட நம்பகத்தன்மை இல்லை. விவசாயம்… வந்தே மாதரம் போன்ற வார்த்தைகளை நரம்பு புடைக்க இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு போய் சேர விடாமல் முழிப் படத்தையும் புஸ்வானமாக்கி விட்டார் ஜெயம் ரவி.

மொத்தத்தில் கார்பரேட் அட்ராசிட்டிக் குறித்தான இப்படத்தை கார்பரேட் நிறுவனமான ஹாட் ஸ்டாரிடமே கொடுத்து ரிலீஸ் செய்தது மட்டும் புத்திசாலிதனம் என்று சொல்ல தோன்றுகிறது.

மார்க் 2.5 / 5

Related Posts

error: Content is protected !!