பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் அடிப்படையில் நமது ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் சேவைகளை நிறைவேற்றும் பொருட்டே நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் காஜியாபாத் மையத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரம்: பிட்டரில் 17, டர்னரில் 4, எலக்ட்ரீசி யனில் 14, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 19, மெஷினிஸ்டில் 5, சிவில் டிராப்ட்ஸ்மேனில் 4, மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 9, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் 4, எலக்ட்ரோபிளேட்டரில் 3ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 30.4.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க:
 ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்:
 22.4.2019

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு