பாஸ்கர் ஒரு ராஸ்கல் – வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ்!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ்!

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது அதை தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தயார் செய்து உள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி – நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து 2015இல் கேரளாவில் வசூலை அள்ளிய திரைப்படம்தான் மேற்படி ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. படத்தின் பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிக வசூலைப் பெற்று மலையாளத் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயர் பெற்ற இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காகி உள்ளது.

மனைவியை இழந்த அப்பாவுக்கும், கணவனை இழந்த அம்மாவுக்கும் குழந்தைகள் இருவரும் திருமணம் செய்து வைக்க எடுக்கும் முயற்சிகள்தான் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படத்தின் கதை. இது ஒன்லைன் தான். படத்தில் அதிக ட்விஸ்டுகள் இருக்கின்றன.

தமிழ் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.’பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.’பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

error: Content is protected !!