பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி/ எக்சிகியூடிவ் டிரெய்னி ஆஃபர்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பி.எச்.இ.எல்., நிறுவனம் பெல் என்றே பெரும் பாலும் அறியப்படும் பொதுத்துறை சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இன்ஜினி யரிங் டிரெய்னி/எக்சிக்யூடிவ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக இருக்கும் 145 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: மெக்கானிக்கலில் 40, எலக்ட் ரிகலில் 30, சிவிலில் 20, கெமிக்கலில் 10, எச்.ஆர்., பிரிவில் 20, பைனான்ஸ் பிரிவில் 25ம் காலியிடங்கள்உள்ளன.

வயது: இன்ஜினியரிங் சார்ந்த பணியிடங்களுக்கு உச்ச பட்ச வயது 27 ஆகவும், இதர இடங்களுக்கு 29 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு தொடர்புடைய பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., மற்றும் நிதிப் பிரிவுகளுக்கு எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., போன்ற படிப்பு தேவைப்படும். சரியான தகவல்களை இணையத்தில் அறியவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- மற்றும் ஜி.எஸ்.டி.,யுடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு, நேர் காணல் என்ற முறைகளில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2019 மே 6.

விபரங்களுக்கு:  ஆந்தை வேலை வாய்ப்பு