சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது!

சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது!

நம் நாட்டில் நாள்தோறும் நான்கு  ஆணவக்கொலைகள் நடந்தேறிக் கொண்டிருக்ககூடிய சூழ்நிலை யில் இனி வரும் காலத்தில்  சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்கிறது  சமீபத்திய இந்திய மனித மேம்பாட்டிற்கான ஆய்வு முடிவு.

இந்தியா முழுவதும் சாதியக் கொடுமை நிலவி வருகிறது. சாதி மாறி திருமணம் செய்தவர்களை கட்டபஞ்சாயத்து மூலம் மிரட்டி பிரித்து வைப்பது, ஒடுக்கப்பட்ட சாதியினரை அடித்து அவமானப் படுத்துவது ,ஆணவக்கொலை செய்வது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இது குறித்து அலசிய போது இந்தியாவில் 2000 ஆண்டுகளாக சொந்த சாதிக்குள் திருமணம் செய்வது என்ற பண்பாட்டை கட்டிக்காத்து வருகின்றனர் நம் மக்கள். இத்தகைய திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் குடும்பம் என்ற அமைப்பு, சாதிய திருமணங்கள் மூலம் தான் கட்டிக்காக்கப் படுவதாகவும் நம்புகின்றனர் .

நம் இந்தியாவில் பல மதங்கள் இருந்தபோதும் கடவுளும் வழிபாட்டு முறைகளும் வேறாக இருந்தாலும் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய சகல மதங்களுடையேயும் ஒன்றாகவே உள்ளது.அங்க மதம் வேறு என்றாலும் இந்து மதத்தின் தாக்கம் சகல மக்களிடையேயும் உண்டு. பொதுவாக இந்துக்களுடையே்களிடையே உள்ள சாதி பாகுபாடு சீக்கியர், பௌத்தர், கிறிஸ்தவ மக்களிடையேயும் உண்டு.

இதையொட்டி சுமார் 70 தலைமுறைகளாக சாதியை காக்க சாதிக்குள் திருமணம் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டு அது வலுவாக நிற்கிறது. ஆனால் சமீபகாலமாக காதல் திருமணங்கள் அங்கொன் றும் இங்கொன்றும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவாக பட்டப்பகலில் நடு ரோட்டில் தலை துண்டிக்கப்பட்ட சங்கர், தண்டவாளத்தில் பிணமான இளவரசன், ஆற்றில் அழுகி கரை ஒதுங்கிய நந்திஸ் ஸ்வாதி தம்பதி என்று தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காதல் திருமணம், வேறொரு சாதியில் திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற பிள்ளையை பெற்றோர்கள் கொல்லத் துணிவதற்கு சாதியின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தமே காரணம். இதில் கிராமம் நகரம் என்ற பாகுபாடில்லை . இந்நிலையில் தான் ஹார்வர்டு அறிஞர் டேவிட் ரெய்ச் எழுதியுள்ள நூலில் சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்ற குறிப்புகள் அடங்கியுள்ளது .

“Who We Are and How We Got Here” என்ற நூலை மனிதர்களின் வேரை கண்டறியும் நோக்கில் அவர்களின் டிஎன்ஏ கொண்டு ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் டேவிட். இதற்காக இந்தியா முழுவதும் வடக்கே காஷ்மீர் தொடங்கி குமரி வரை அனைத்து மாநிலங்களிலும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியர்கள் ,தென்னிந்தியர்கள் என்று செய்யப்பட்ட இந்த ஆய்வில் வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் இரண்டு தரப்பிலுமே அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து உள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளனர். தேசிய அளவில் 5 முதல் 6 சதவிதம் பேர் தான் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர் . அதிகபட்சமாக மிசோரமில் 55% பேர் சாதிமறுப்பு திருமணம் செய்துள்ளனர். தமிழகத்தில் வெறும் 3 % அளவில் தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது.

இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிக் குழுக்கள் உள்ளன. இதில் 263 வகையான சாதிக் குழுக்களிடம் இந்த ஆய்வை நடத்தி யுள்ளனர். இதில் 81 குழுக்கள் தாங்கள் ஆதிக்க சாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றன. 10 லட்சத்தை தாண்டி எண்ணிக்கையில் சுமார் 14 சாதிக்குழுக்கள் இந்தியாவில் உள்ளனர். 5 ஆயிரம் சாதிக்குழுக்கள் இருக்கிறதென்றால் ஐயாயிரம் மரபு வகை நோய்களும் இந்தியாவில் இருக்கின்றன என்பதையும் டிஎன்ஏ சோதனை மூலம் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துக்கொண்டதன் விளைவாக அவர்களுக்கு நோய் உண்டாவதிலும் , பாரம்பரியமாக தலைமுறை கடந்தும் அந்நோயின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதும் இயல்பான ஒன்றாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வருங்காலங்களில் இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்பதனை இந்த ஆய்வுக்குழு நம்பிக்கையோடு தெரிவிக்கிறது .

காரணம் ஆய்வு செய்த இடங்களில் பெரும்பாலானோர் தங்களது பிள்ளைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக கூறுகிறது இந்த ஆய்வுக்குழு. இதன் மூலம் ஆரோக்கியமான இந்தியா உருவாவது வரும் தலைமுறையினரின் சாதி மறுப்பு திருமணத்தில் தான் உள்ளது என்பதே இந்த ஆய்வுகள் மூலம்  வெளியாகும் தகவல்.

Related Posts

error: Content is protected !!