June 25, 2022

சீஃப் ஜட்ஜா இருந்தவருக்கு எம்.பி. போஸ்ட் கொடுத்ததற்கு இம்புட்டு கமெண்ட்டா?

மரபுகளை உடைக்கிறதுனு ஆரமிச்ச பிறகு ஒண்ணு ரெண்ட மட்டும் விட்டு வைக்க அவசியம் இல்லதான்.

ரஞ்சன் கோகாய ராஜ்யசபா எம்.பி.யா நியமிச்சு இருக்கு மோடி சர்க்கார்.

மோடி நல்லவர். ரஞ்சனும் நல்லவர்.

ஆனா, ரஃபேல் கேஸ்லயும், சிபிஐ டைரக்டர் டிஸ்மிஸ் கேஸ்லயும் சாதகமா தீர்ப்பு சொன்னதுக்கு பரிசு இந்த பதவினு கூசாம சொல்லும் இந்த நாடு.

இதுக்கு முன்னாடி பழைய தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவ எம்.பி ஆக்கின காங்கிரச ஒருத்தரும் கண்டிக்கலயேனு பிஜேபி கேக்குது.

ரங்கநாத் ரிடயர் ஆகி 7 வருசம் கழிச்சு எம்.பி ஆனாரு. அதுவும் காங்கிரஸ் ஓட்டு போட்டு. அப்போ ஆட்சில இல்ல காங்கிரஸ்.

ஹிதயதுல்லாவ எம்.பி ஆக்கலயானு அடுத்த கேள்வி.

ஆக்கல. 1970 ல ரிடயர் ஆன அவர 1979ல துணை ஜனாதிபதி ஆக்கினது காங்கிரஸ். அந்த பதவியால அவர் ராஜ்யசபாவுக்கு தலைவரா வந்தார்.

நேரடியா பிரதமர் சம்பந்தப்பட்ட கேஸ்கள்ல (சாதகமான) தீர்ப்பு கொடுத்தவர ரிடயர் ஆன மூணே மாசத்துல எம்.பி.யா நியமிச்சா ஊர் பேசத்தான் செய்யும்.

சதாசிவத்த கேரளா கவர்னரா நியமிச்சப்ப கடுமையா விமர்சனம் செஞ்சோம். இது அதவிட மோசமான முன் உதாரணம்.

கோர்ட்டுகள் மேல மக்கள் வச்சிருக்கிற மிச்ச நம்பிக்கைய காலி பண்றதும்

இருக்ற நீதிபதிகளுக்கு ஸ்ட்ரெய்ட்டா ஒரு மெசேஜ் சொல்றதும்தான்

நோக்கமா இருந்தா.. அமித் ஜி ஆபரேஷன் 101 சதவீதம் சக்சஸ்.

நாலு சகாக்கள சேத்துகிட்டு மீடியாவ மீட் பண்ணி ஷாக் கொடுத்தப்ப, புரட்சிக்கார நீதியரசர்னு கோகாய பாராட்டினோம்.

தன் மேல தொடரப்பட்ட செக்சுவல் ஹாரஸ்மென்ட் கேச, தானே விசாரிச்சு அந்த பெண்ணோட குடும்பத்தையே கதற விட்டப்பவே அவர நாம புரிஞ்சிருக்கணும்.

மறைந்த தலைவர் ஒருத்தர் சொன்ன கருத்துதான் அசரீரி மாதிரி கேக்குது.

“ரிடயர்மென்ட் நெருங்கும்போது பல ஜட்ஜுங்க அடியோட மாறிட்றாங்க.

ரிடயர் ஆன பிறகு அரசாங்கம் ஏதாவது நல்ல பதவி தரணும்னு எதிர்பார்த்து, ஆட்சியாளர்களுக்கு சாதகமா தீர்ப்பு எழுதுறாங்க.

இதனால நம்ம நீதித்துறையோட நடுநிலை தடம் புரளுது.

அதான் ரிடயர் ஆகிற நீதிபதிகளுக்கு பதவி கொடுக்கறத எங்க கட்சி எதிர்க்குது.

இந்த நியமனங்களுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்” னு

அருமையா சொன்னாரு அந்த தலைவர்.

அவரோட பேரு அருண் ஜேட்லி.

எக்ஸ்ட்ரா டவுட்:

தலைமை நீதிபதி சம்பளம் 2 லட்சத்து 80 ஆயிரம்.

ரிடயர் ஆனாலும் அட்லீஸ்ட் பாதி பென்ஷனா கிடைக்கும்.

தேவைன்னா ஸ்பீச் குடுத்து, புக் எழுதி சில லட்சங்கள் சம்பாதிக்கலாம்.

அதுக்கு மேல எம்பி குதிக்க என்னதான் தூண்டுதோ தெரியல.

போகட்டும்.

புது பதவில வர்ற சம்பளமும் சலுகைகளும் பென்ஷன் பெனஃபிட்சோட க்ளாஷ் ஆகாதா? டபுள் பெனஃபிட்ஸ் செல்லுமா?

தெரிஞ்சவங்கள கேக்கணும். பட், இப்ப நேரம் சரி இல்ல.

கதிர்