August 14, 2022

பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதன் பகீர் பின்ன‌ணி!

நடப்பு 2019–20 நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களை விற் பதன் மூலம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியை திரட்ட வேண்டுமென்று, மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயித்து உள்ள நிலையில், அதற்கான பணி களை தற்போது தீவிரப்ப டுத்திஇருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.விற்பனைக்கான பட்டிய லில், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன்’, ‘கன்டெய்னர் கார்ப் ஆப்இந்தியா லிமி டெட்’, ‘ஏர் இந்தியா’ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவ னங்களே தற்போது முன்ன ணியில் வைக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய எண் ணெய் சுத்திகரிப்பு நிறுவன மாகவும், சில்லரை விற்பனை நிறுவனமாகவும் இருப்பது, பாரத் பெட்ரோலி யம் கார்ப் பரேசன் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனத்தில், மத்திய அரசுக்கு 53.3 சதவிகித பங் குகள் இருக்கும் நிலையில், அவற்றில் பெரும்பாலான பங்குகளை உள்நாட்டு, வெளி நாட்டு நிறுவனங் களுக்கு விற்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தொட‌ர்ந்து எட்டாவ‌து முறையாக‌ இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக‌ முடி சூடியிருக்கும் முகேஷ் அம்பானிக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு வங்கிகள் நிதி நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன் தொகை நான்கு லட்சத்து எண்ப‌த்தி ஆறாயிர‌ம் கோடி (4,86,000 கோடி)

கிரெடிட் ஸ்யூஸை (Credit Suisse) என்ற நிதிநிலை மதிப்பிடும் பன்னாட்டு நிறுவனம் இனி அம்பானி குழும‌த்துக்கு கடன் கொடுப்ப‌து ஆபத்து என்று அறிவித்ததோடு தன்னுடைய வாடிக்கையாளர்கள் ம‌ற்றும் சகோத‌ர‌ வ‌ங்கிக‌ளும் இனி இவ‌ர்க‌ளுக்கு க‌ட‌ன் தரமாட்டார்கள் என்று அறிவித்து விட்டது.

இந்த‌ நிலையில்தான் உல‌கின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ச‌வூதி அரேபியாவின் அராம்கோ (Aramco) ரிலையன்ஸில் 20% பங்குகளை வாங்குவதோடு கொஞ்சம் முதலீடும் செய்ய முடிவெத்துள்ளது.அதாவது கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் முத‌லீடு செய்ய‌ அரம்கோ திட்டமிட்டுள்ளது.

அரம்கோவின் சொத்து ம‌திப்பான‌ USD 1.1 Trillion னோடு ஒப்பிடுகையில் அது அவ‌ர்க‌ளுக்கு சில்ல‌றைக் காசு ..  ஆனாலும் இப்போது ரிலையன்ஸ் குரூப்பின் எந்த‌ க‌ம்பனியுமே பெரிதாய் லாபம் ஈட்டும் நிலையில் இல்லை என்ப‌தால் அராம்கோ நிறுவனம் கொஞ்ச‌ம் தயங்கியது.

இங்குதான் அம்பானியின் குள்ளந‌ரித்த‌ன‌மும் அர‌சின்மேல் அவ‌ருக்கிருக்கும் வ‌லுவான‌ பிடியும் வெளிப்ப‌டுகிற‌து. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டை ரிலையன்ஸுக்கு விற்று விட்டால் ரிலையன்ஸ் குழும‌ம் இன்னும் வலுப்பெறும். பாரத் பெட்ரோலியத்தின் மதிப்பு நான்கு லட்சம் கோடியைத் தாண்டும்.

நான்கு ரிஃபைனரீஸ், சிறிய மற்றும் பெரிய எண்ணெய் கிணறுகள் 100, பதினைந்துக்கும் மேற்பட்ட எண்ணெய் சேமிக்கும் டெர்மினல்கள், கிட்டதட்ட பத்து ஸ்டேட் ஆஃபீஸ்கள், அறுபதுக்கும் மேற்பட்ட டெரிட்டரி அலுவலகங்கள், 16,000-க்கும் அதிக‌ம் பெட்ரோல் பங்குகள், அதிகாரிகள் குடியிருப்புகள் என நிறைய சொத்து மதிப்புடையது பாரத் பெட்ரோலியம்.

இதனுடைய மொத்த‌ மதிப்பு நான்கு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்ப‌து தோராய‌ க‌ணிப்பு.

இந்த‌ நிறுவ‌ன‌த்தில் அர‌சின் க‌ட்டுப்பாடில் உள்ள‌ 54% பங்குகளின் மதிப்பு என்பது கிட்டத்தட்ட 2 லட்சம் கோடியாகும். ஆனால் இந்த‌ ப‌ங்குக‌ளை வெறும் நாற்பதயிரம் கோடிக்கு ரிலையன்ஸூக்கு விற்க முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.

அராம்கோ நிறுவனம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடியை ரிலையன்ஸுக்கு தனியாக தந்து விடும். ரிலையன்ஸும் தன்னுடைய கடனை வெகுவாக குறைத்துவிடும். இப்போது ரிலையன்ஸூக்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் அமைந்து விடுவதால் அராம்கோ நிறுவனத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.

கடைசியாக மிகக் கணிசமான தொகை கட்சிக்கோ ஆள்பவர்களுக்கோ போய் சேர்ந்து விடும்.

இதுதான் பாரத் பெட்ரோலியம் விற்கபடுவதன் பின்ன‌ணி..

இந்திய‌ அர‌சுக்கு சொந்த‌மான‌, கோடானு கோடி ம‌க்க‌ளின் சொத்தான‌, 1976-ல் தேசிய‌ ம‌ய‌மாக்க‌ப் ப‌ட்ட‌, உல‌கின் மிக‌ப்பெரிய‌ பெட்ரோலிய‌ க‌ம்பனிக‌ளுள் ஒன்று ச‌ப்த‌மில்லாம‌ல் த‌னியாருக்கு தாரைவார்க்க‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

நெஞ்சு பொறுக்குதில்லையே….!

சிவணாண்டி