உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் வேணாம்;.‘பீர்’ குடிங்கப்பூ!

உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் வேணாம்;.‘பீர்’ குடிங்கப்பூ!

தற்போது ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அருந்தும் பீர் என்பது ரொம்ப காலத்திற்கு முந்தைய மது பானங்களில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் உலகின் மிகப் பழமையான மது பானம் என்றும் 4000 ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்பாகவே பீர் வழக்கத்தில் இருந்துள்ளதாக அக்காலக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னதாக அந்தக் கால எகிப்தியர்கள் தான் முதலில் மாவுச்சத்துள்ள பொருட்கள் கெட்டுப் போவதால் (புளித்துப் போவதால்) ஒரு விதமான புளித்த பொருளாக மாறி பருகும் பொழுது போதை தருகின்றது எனக் கண்டுபிடித்தவர்கள். அதே சமயத்தில் உலகின் பல்வேறு நாட்டினராலும் பல விதமான பொருட்கள் கெட்டுப் போவதால் பல விதமான போதைப் பொருட்கள் கிடைக்கின்றது என கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சுமார் 4000 ஆண்டுகள் பீர் மற்றும் பிற மது பானங்கள் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டு தனி மனிதர்களின் தேவைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. பின்னர் கி.பி. 700 ல் ஏற்பட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டன. ஐரோப்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் முதன் முதலாக தொழிற்சாலைகளில் மது வகைகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் அது 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் விரிவாகவும் திறம்படவும் செய்யப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகத் தரமான வகைகளும் அதிகமான உற்பத்தியும் செய்யப்பட்டு அனைத்து உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது.

bee4r may 7

ஆனால் பியர் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என பலர் நினைத்து வருகிறார்கள். உண்மை தான், அதிகமாக குடித்தால் அது உங்கள் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும். ஆனால் அளவாக பருகினால் இது உங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தும். ஆம்.. தினமும் பீர் பருகினால் ஆண்களுக்கு கிட்னியில் கற்கள் ஏற்படும் இடர்பாடு குறையும் என ஆய்வுகள் கூறுகிறது. கருமையான பீரில் கரையத்தக்க ஃபைபர் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. பீயரில் வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் அடங்கியுள்ளது. பீயர் குடிக்காதவர்களை விட குடிப்பவர்களிடம் தான் இது அதிகமாக காணப்படுகிறதாம்.

பீயரில் சிலிகான் வளமையாக உள்ளது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவாகும். பீயரில் பல வகைகள் உள்ளது. முக்கியமாக 400-க்கும் அதிகமான பீர் வகைகள் உள்ளது. அதனால் ஒரு வகை பீயர் அலுப்பை தட்டி விட்டால், மற்றொரு வகையை முயற்சிக்கலாம். பீயருடன் சேர்த்து ஐஸ் க்ரீம் உண்ணுங்கள். அதன் சுவை நன்றாக இருக்கும். சிறிதளவு பீயர் குடித்தால் மனநிலை பாதிப்பு உண்டாகும் இடர்பாடு குறைந்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதயம், கழுத்து, மூளை மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் இரத்த உறைகட்டிகளை இது தடுக்கும். இதனால் பக்கவாதம் வருவதைத் தடுக்கும். பெண்கள் தங்களின் கூந்தலை பீரை கொண்டு அலசினால், பெண்களின் வலுவிழந்த கூந்தல் திடமாகி வலுப்பெறும். இதையெல்லாம் முன்னரே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெளியிட்டிருந்தாலும் “உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!.

error: Content is protected !!