August 8, 2022

சர்ச்சையைக் கிளப்பும் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்த நீராவி வாகனம்!

கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்துள்ளதுதான் இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது .  ஆம்.. இந்த `ஆவி பிடித்தல்’ யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக் கூடிய எளிமையான வைத்திய முறைதான். என்றாலும், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு முறையற்ற, அலட்சியமான போக்கில் ஆவி பிடிக்கும்போது காயங்கள், கொப்புளங்கள், அலர்ஜி போன்ற சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது .,.உண்மையில், ஆவி பிடிப்பதன் மூலம் எந்தவொரு வைரஸ் அல்லது பாக்டீரியாவையும் அழிக்க முடியாது. நமக்கு ஜலதோஷம் அல்லது சளியின் காரணமாக ஏற்பட்டுள்ள மூக்கடைப்பிலிருந்து உடனடியாக விடுபட மட்டுமே `ஆவி பிடித்தல்’ உதவுகிறது. தவிர நோய்க்கிருமிகளால் நமக்கு ஏற்படும் காய்ச்சலைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ இதனால் முடியாது. சொல்லப்போனால் `ஆவி பிடித்தல்’ என்பது ஒரு மருத்துவ முறையே அல்ல. மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும் ஒரு எளிய வழி. அவ்வளவே.

அதாவது சூடான வெந்நீரிலிருந்து வரும் ஆவியை சுவாசிக்கும்போது நம் மூச்சுக்குழல் சற்று வெதுவெதுப்பான வெப்பத்தை உணரும். இந்த வெப்பம் மூச்சுக்குழலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தைக் குறைத்துச் சிக்கலற்ற சுவாசத்துக்கு உதவும். சிலர் ஆவி பிடிக்கிறேன் என்ற பெயரில் தைலம் அல்லது மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மாத்திரையை வெந்நீரில் கலந்து அதில் வரும் ஆவியை சுவாசிக்கின்றனர். இன்னும் சிலர் வெந்நீரில் பச்சிலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கின்றனர். இவை எல்லாம் முற்றிலும் தவறானவை. இதனால் மூச்சுக்குழல் மற்றும் கண்களில் எரிச்சல், அலர்ஜி ஏற்படலாம்.

நீராவி என்றில்லை, வெந்நீர் குடிப்பது / வெந்நீரில் குளிப்பது போன்றவை கொரோனா வைரஸை அழிக்கும் என்றெல்லாம்கூட ஒரு சிலர் சொல்கின்றனர். இந்தத் தகவல்களுக்கெல்லாம் அடிப்படை, `அதிக வெப்பத்தில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும்’ என்ற கருத்தாக்கம்தான். ஆனால், இந்தத் தகவல் நிரூபிக்கப்பட்டதில்லை. ஆவி பிடிக்கும்பொழுது, நாசித்துவாரத்தின் இந்த இயற்கை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் நாசித்துவாரங்கள் சுத்தப்படுத்த பட்டு, காற்றில் இருக்கும் எல்லா திட நுண்பொருட்களும் நேரடியாக நுரையீரலுக்கு செல்லும்.

ஆனால் இன்றைக்கும் சிலரோ அதிக சூடான நீரில் ஆவி பிடித்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று, தண்ணீரை 100 டிகிரி செல்சியஸில் கொதிக்க வைத்து அப்படியே ஆவி பிடிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது வெந்நீர் உடல் மீதோ, கண்களிலோ பட்டு கொப்புளங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது இதை உறுதிப்படுத்தி, ” கடந்த மூன்று மாதங்களாக நாசித்துவாரத்தில் சேதம் ஏற்பட்டு மருத்துவர்களை அணுகும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆவி பிடித்தல் காரணமாக ஆஸ்துமா அறிகுறிகள் மோசமடைந்து வருவதும் கவனிக்கத்தக்கது,” என்று பிரபல மருத்துவ நிபுணர் சத்ய நாராயண மைசூர் தெரிவித்தார்.

ஆக தேவையில்லாமல் ஆவி பிடிப்பதால் அந்த வெப்பம் மூளையைத் தூண்டி விடுவதோடு, சிதைவு அறிகுறிகள் எற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அதனால் உரிய பரிந்துரை இல்லாமல் சகலருக்கும் ஆவி பிடிக்கும் திட்டத்ததை  வானதி சீனிவாசன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலானோர் சொல்லி வருகிறார்கள்:

நிலவளம் ரெங்கராஜன்