பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜிநாமா!

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜிநாமா!

ந்திய கிரிக்கெட் அணியில் ஊக்கமருந்து ஊசிகள் பயன்படுத்துவது உள்ளிட்ட பிசிசிஐ சார்ந்த பல்வேறு தகவல்களை Zee News நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் பிசிசிஐ அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்திருந்தார். அந்த உளவு கேமாராவில் அவர் கூறியிருந்த அத்தனை தகவல்களும் கடந்த பிப். 14ஆம் தேதி வெளியாகி கிரிக்கெட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, அதுகுறித்த பேச்சுகள் போய்கொண்டிருந்த நிலையில், தனது தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து சேத்தன் சர்மா விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவரின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் ஒப்படைத்ததாகவும், அதனை ஜெய் ஷா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. Zee News ஸ்டிங் ஆப்ரேஷனில் வெளியான தகவல்களை அடுத்தே அவரின் ராஜினாமா அமைந்துள்ளது.

முன்னதாக கங்குலி, கோலி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பும்ரா என பலர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்திருந்தார். அது இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் உலகிலும் கவனம் பெற்றது. சேத்தன் சர்மா பகிர்ந்த பகீர் தகவல்கள் இதோ:

> பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு முன்னாள் கேப்டன் கோலியை அறவே பிடிக்காது. அதற்காக அவர் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இருந்தார் எனவும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

> பிசிசிஐ-யை விட தன்னை மிகப்பெரிய நபராக முன்னாள் கேப்டன் கோலி கருதியதாக சொல்லியிருந்தார்.

> டி20 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார். புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என தெரிவித்தார். அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் எனவும் சொல்லி இருந்தார்.

> தங்களை போதுமான உடல் தகுதியுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள வீரர்கள் ஊசி போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

> கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது காயத்தை மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

> ஹர்திக், உமேஷ் யாதவ், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் தன் வீட்டுக்கு அண்மையில் வந்திருந்ததாகவும். அவர்கள் தன்னை நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

> கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே ஈகோ இருப்பதாகவும், அதனால் இந்திய அணி இரண்டு குழுக்களாக பிரிந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

> சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களின் கரியர் ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

a

Related Posts

error: Content is protected !!