ஐ.பி.எல். ; மிஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கப் போகுதுங்கோ!

விளையாட்டு ரசிகர்களின் திருவிழாவான 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது அந்த வகையில் இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பல வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,எஞ்சியுள்ள 31 போட்டிகள் கொண்ட ஐபில் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தின்,குவைத்,சார்ஜா மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உள்ளதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த ஐபிஎல் போட்டி மீண்டும் நடைபெறும் போது, இங்கிலாந்து அணி வீரர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் உட்பட வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியவை குறித்தும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை பற்றியும் ஆலோசிக்கப்படுவதக செய்திகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது