பேட்டரி – விமர்சனம்!

ம்மில் பெரும்பாலானோர் வாசிப்புப் பழக்கம் உடையவர்களாகவே இருப்போம்.. அதிலும் வாசிக்க விருப்பமுடையவர்களிடையே துப்பறியும் கதைகள் கொடுக்கும் அலாதியான ஆர்வமே தனி..அப்படியான திகில் வாசிப்பானுபவத்தை ஒரு சினிமாவாகக் கொடுத்து கவர முயன்று இருக்கிறார்கள்..!

அதாவது ஐபிஎஸ் முடித்து விட்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டராக டூட்டியில் சேர்ந்தவர் புகழ் (செங்குட்டுவன்). தன் ஏரியாவில் நிகழ்ந்த கொலை விசாரணை ஒன்றில் ஆர்வம் காட்டும் அவரை இன்ஸ்பெக்டர் அவமானப்படுத் துகிறார். பொறுத்துக்கொண்டு வேலை பார்க்கிறார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்படுகிறார். அதேபோல் தொழில் அதிபர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இதை புகழ் போலீஸ் உதவி கமிஷனருடன் சேர்ந்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த கொலைகளை செய்தவர் புகழ்தான் என்பதை உதவி கமிஷனர் கண்டுபிடித்து விடுகிறார். அவரை கைது செய்ய முயலும் போது தொழில் அதிபரின் மகனை கொன்று விட்டு சரண் அடைவ தாக புகழ் கூறுகிறார். புகழிடமிருந்து தொழில் அதிபர் மகனை உயிரோடு மீட்க உதவி கமிஷனர் போராடுகிறார். இறுதியில் நடந்தது என்ன? புகழ் கொலைகாரராக மாற என்ன காரணம்? என்பதற்கான பதில் சொல்லும் படமே ‘பேட்டரி’.

புகழ் என்ற நாமகரணத்தில் வரும் செங்குட்டுவன் எடுத்துக் கொண்ட கேரகட்ருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் குழம்பும்போது சரியான க்ளு கொடுத்தும் அதை அவர் ஏற்காமல் திட்டுவதால் புகழ் மனம் உடையும்போது பல கீழ் அதிகாரிகளுக்கு இதுபோல் நேரடி அனுபவமாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..

ஹீரோயினாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். பெரிய வேலை இல்லாவிட்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நடமாடுகிறார்.

சித்தார்த் விபின் இசை, தினேஷ் ஒளிப்பதிவு இரண்டும் நச்..

சி.மாத்தையன் படத்தை தயாரித்திருக் கிறார். எழுதி இயக்கியுள்ளார் மணி பாரதி  பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டு போல, ஏன்.. எதற்கு.. எப்படி?.. என்கிற ஆர்வத்தை தூண்டும்படியாக இருக்கிறது. கூடவே மெடிக்கல் மாஃபியாக்களின் போக்கையும் அம்பலப்படுத்துகிறார்.

மொத்தத்தில் பேட்டரி- இன்ஃபர்மேட்டிவ் த்ரில்லர்.

மார்க் 2.75/5

error: Content is protected !!