வித்யாசருக்கு விடை கொடுத்தாச்சு – தமிழக புது கவர்னரானார் பன்வாரிலால் புரோஹித்

வித்யாசருக்கு விடை கொடுத்தாச்சு – தமிழக புது கவர்னரானார் பன்வாரிலால் புரோஹித்

தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க  பட்டுள்ளது.

இந்த  பன்வாரிலால் புரோகித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி பிறந்தவர்.

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவைச் சேர்ந்தவர் பன்வாரிலால் புரோஹித். 1977-ம் ஆண்டு அவர் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.முதன்முதலில் 1978-ல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் நாக்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். பின்னர் 1980-ல் நாக்பூர் தெற்கு தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982-ல் முதன்முதலாக அமைச்சரானார்.

1984, 1989 ஆண்டுகளில் நாக்பூர்  கம்டீ தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். 996-ல் மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். அப்போது உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

கோபால கிருஷ்ன கோகலே உருவாக்கிய தி ஹிதாவதா ஆங்கில நாளிதழை மீண்டும் உயிரிப்பிப்பதில் பெரும் பங்காற்றினார். நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு மீண்டும் செயல்படத் தொடங்கிய அந்தப் பத்திரிகை சில காலம் மத்திய இந்தியாவில் சிறந்து விளங்கியது.

இவர், 2015-ல் அசாம் மாநில ஆளுநராகவும், 2016-ல் மேகாலயா மாநில ஆளுநராகவும் இருந்தார். தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை கவர்னராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மேகாலயா கவர்னராக கங்கா பிரசாத், அசாம் கவர்னராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி.மிஸ்ரா, பீஹார் கவர்னராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!