January 26, 2022

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

குவாலிட்டி அஸ்யூரன்ஸ் 14, டெவலப்பர் 24 (ஜாவா 12, மொபைல் அப்ளிகேசன் 12), யு.ஐ., / யு.எக்ஸ் டிசனைர் 2 என 40 நிரந்தர பணியிடமும், கிளவுட் இன்ஜினியர் 2, அப்ளிகேசன் ஆர்க்கிடெக் 2, என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக் 2, டெக்னாலஜி ஆர்க்கிடெக் 2, இன்ப்ராஸ்டக்சர் ஆர்க்கிடெக் 2, இன்டக்ரேசன் எக்ஸ்பெர்ட் 2 என 12 ஒப்பந்த பணியிடம் உட்பட மொத்தம் 52 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் அவசியம்.

வயது:

1.12.2021 அடிப்படையில் 28 – 40, 25 – 35, 23 – 30 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள் :

28.12.2021

விபரங்களுக்கு: 

ஆந்தைவேலைவாய்ப்பு